கொள் அல்லால் கொல்
கொள்ளாது கொல்வாயோ
அன்றி கொண்டு கொல்வாயோ

கொல் அல்லால் கொள்
கொல்லாது கொள்வாயோ
அன்றி கொன்று கொள்வாயோ

கொல் கொள் இரண்டும்
காதலில் ஒன்றெனச் சொல்

8 comments:

cheena (சீனா) said...

அன்பின் புகாரி

கொல் - கொள் - இரண்டும் ஒன்றெனச் சொல் - காதலில் ம்ம்ம்ம்ம்ம்ம்

கொள்ளாது கொல்வது முடியும்
கொண்டு கொல்வது - காதலில் சதி வேலை - வேண்டாம்

கொல்லாது கொள்ளட்டும்
கொன்று கொள்ள வேண்டாம் - இயற்கைக்கு புரம்பானது

சொற்சிலம்பம் ஆடும் புகாரி - நல்வாழ்த்துகள்

பூங்குழலி said...

கொள் கொல் என்ற சொற்களோடு விளையாடியிருக்கிறீர்கள் புகாரி ...மிக மிக ரசித்தேன்

தேவன் said...

உண்மையிலேயே நல்லா இருக்குங்க !!

vasu balaji said...

வார்த்தைச் சித்தரின் வார்த்தைச் சிலம்பம் அட்டகாசம்.

துரை said...

வார்த்தையில் வார்த்தையோடு விளையாட்டு :)

நன்று ஆசான்

விஷ்ணு said...

அருமை அன்பின் ஆசானே ..
வார்த்தைகளின் வர்ணஜாலம் அழகான கவிதையாய் ..

சிவா said...

ரொம்பவே நல்லா இருக்கு... புரிய கொஞ்சம் கஷ்டமா இருந்தது

ஆயிஷா said...

கொன்று விட்டீர்கள் ஆசான் கவிதையால்!
அன்புடன் ஆயிஷா