புனிதமா அழுக்கா

கழிப்பிடத்திற்கும்
கடவுளிடத்திற்கும்
செல்ல
உனக்கிருப்பது
ஒரேயொரு தேகம்தான்

படுக்கையறைக்கும்
க்தியறைக்கும்
செல்ல
உனக்கிருப்பது
ஒரேயொரு நெஞ்சக்கூடுதான்

அசுத்தமும் சுத்தமும்
உனக்குள்
மாறிமாறிவரும்
அயராத நிகழ்வுகள்

நீ
புனிதமா
அழுக்கா

No comments: