மௌனம்


மௌனம்
சிறந்த மொழி


மௌனம்
பேரறிவின் அடையாளம்


மௌனம்
உயிரின் காப்பகம்


மௌனம்
உணர்வுகளின் நங்கூரம்


மௌனம்
மன்னிப்பின் ஆலயம்


மௌனம்
வானத்தின் நீலம்


மௌனம்
கடலின் ஆழம்


மௌனம்
கருந்துளையின் ரகசியம்


ஆனால்

சில
மௌனங்களின்
பின்னால்

கொடிய
ஆபத்து வலைகள்
அவசர அவசரமாய்ப்
பின்னப்பட்டுக் கொண்டிருக்கின்றன
என்பது மட்டுமே

மௌனத்திற்கான
ஒற்றைச் சாபக்கேடு

No comments: