கவிதைகள் பலவிதம்


மரபுக் கவிதைகள்
மடிசார்ப் புடவைகள்
அச்சு மாறாமல்
கட்டுதல் வேண்டும்


புதுக் கவிதைகள்
நவீன ஆடைகள்
விருப்பம்போல
இட்டுக் கொள்ளலாம்


துளிக் கவிதைகள்
        நீச்சலுடைகள்
இயன்றவரைக்கும்
வெட்டியெறிதல் வேண்டும்


அனைத்தும் அழகுதான்
        அனைத்துக் குள்ளும்
பொம்மைகள் இன்றி
உயிர்கள் இருப்பின்

1 comment:

cheena (சீனா) said...

அன்பு நண்ப புகாரி,


மரபுக் கவிதை, புதுக் கவிதை, துளிக் கவிதை - விளக்கம் அருமை. உடன் படுகிறேன்.


உயிருள்ள கவிதை தான் கவிதை எனப்படும். பொருளில்லா கவிதைகள் ஏற்றுக்
கொள்ளப்படுவதில்லை.


*துணைவியின் கருத்து* :
-------------------


எழுத்தும் அசையும் சீரும் தளையும் அடியும் இருந்தாலும் பொருளில்லாதது
உயிரில்லாத உடலைப் போன்றது என்பது யாப்பின் யாப்பு.


நாமக்கல்லாரின் கூற்று :


எழுத்தும் சொல்லும் பொருளும் கதையும் பொருளில்லை என்றால் கவியெனக் கொள்ள
மாட்டான் தமிழன்.


அன்புடன் ..... சீனா
-------------------