11 

பட்டாம்பூச்சி

வெறுமனே ஒரு
செத்த புழுவாய்த்தானே
வெளியேறியது
ஓர் அரை நொடிக்கு முன்

இறக்கை
எப்படி முளைத்தது
வர்ணங்கள்
எப்படி வந்தன இப்போது

அடடா...
வெற்றித் திலகங்களை
நெற்றியில் அணிந்து
வெளியேற்றியவனிடமே
விரைந்து வந்து நின்று
என்னமாய்ச்
சிறகடித்துப் பறக்கிறது
இந்தப்
பொய்யெனும் பட்டாம்பூச்சி

2 comments:

Unknown said...

பட்டாம்பூச்சி கவிதை அருமையாக உள்ளது. அதன் வாழ்க்கையினை படம் பிடித்துக்காட்டியுள்ளீர்கள். நன்றி.

Unknown said...

நன்றி விஜி