29

என் தோட்டத்தில்
உனக்கான
பழங்கள் இல்லை

என் காற்றில்
உனக்கான
வாசம் இல்லை

என் நீரில்
உனக்கான
தாகம் இல்லை

ஆனால்
என் உயிரை
உனக்காக
விருந்து படைக்கும்
காதல்
இருக்கிறது

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

6 comments:

cheena (சீனா) said...

காதலின் அருமை காதலர்களை விட கவிஞர்களுக்குத் தான் அதிகம் புரிகிறது - தெரிகிறது. வாழ்த்துகள்

அன்புடன் புகாரி said...

ஆனால்
என் உயிரை
உங்களுக்காக
விருந்து படைக்கும்
கவிதை இருக்கிறது
என்னிடம் :)))

நன்றி சீனா

புன்னகையரசன் said...

கவிதை விருந்து படைக்கிறது ஆசான்....

அழகா இருக்கு

பூங்குழலி said...

என் தோட்டத்தில்
உனக்கான பழங்கள் இல்லை
என் காற்றில்
உனக்கான வாசம் இல்லை
என் நீரில் உனக்கான
தாகம் இல்லை

அருமையாக இருக்கிறது

சிவா said...

அட அட அட ... காதல் காதல் காதல் ... :)

சக்தி said...

என் மனதில்
உங்கள் கவிதையின் வாசம்
கமழ்ந்து கொண்டிருக்கிறது.

அன்புடன்
சக்தி