31

உன் முகத்தில்
எனக்கு மிகவும் பிடித்தது
எது தெரியுமா என்றாய்

சட்டென்று உதடுகள் என்றேன்
நீ அதிசயத்தாய்

அதிசயிக்க இதில் என்ன இருக்கிறது
ஆயிரம் முறை என் காதலை நான்
உரத்து சொன்னாலும்
ஒரே ஒரு முறை
என் உதடுகள் உன் உதடுகளை
ஒத்திச் சொல்வதற்கு ஈடாகுமா

அது உனக்குப்
பிடிக்காமல் போய்விடுமா

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

3 comments:

cheena (சீனா) said...

இதழ்கள் இதழ்களை ஒத்தும் போது - உரசும் போது பிடிக்காமல் போகுமா என்ன - முகத்தில் பிடித்தது உதடுகல் தான் - ஈரம் சொட்டச் சொட்ட ஜொலிக்கும் கீழுதடு - அழுத்த அழுத்த இனிக்கும் இதழ்கள்

நல்ல கற்பனை - நல்வாழ்த்துகள் நண்ப புகாரி

புன்னகையரசன் said...

சத்தமின்றி முத்தமிடுதலை அழகாக சொல்லி இருக்கிறீர்கள் ஆசான்....
அழகு... அருமை

சிவா said...

அருமை ஆசான் :)