30

விரலுக்கு மோதிரமிட்டு
கைகளையே
கழற்றிக்கொள்ளும் உலகில்
உணர்வுக்கு மோதிரமிட்டு
என் இதயத்தைக்
கழற்றிக்கொண்டவளே

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

 

Comments

பூங்குழலி said…
//உணர்வுக்கு மோதிரமிட்டு
என் இதயத்தைக்
கழற்றிக்கொண்டவளே
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்//

அழகு இது
ஆயிஷா said…
இரண்டுக்கும் வித்தியாசம் இல்லை. இரண்டும் திருடப்பட்டுள்ளது. ஆசை கொண்டதை திருடிக் கொள்வதிலும் தப்பில்லை இல்லையா? இப்படிச் சின்ன சின்ன விடயங்களையும் கவிதையாக்கும் இயல்பு அழகு.
அன்புடன் ஆயிஷா
//விரலுக்கு மோதிரமிட்டு
கைகளையே
கழற்றிக்கொள்ளும் உலகில்//


இது என் வாழ்வில் நடந்தது ஆயிஷா

கைகளைக் கழற்றிக்கொள்வது என்பது என்றால் என் உழைப்பு அத்தனையையும் திருடிக்கொள்வது. வெறுமனே ஒரு மோதிரத்தை இலவசமாகப் போடுகிறேன் என்றுவிட்டு செய்யும் மிகப்பெரிய சதி வேலை. இளையவர்கள் இப்படித்தான் ஏமாற்றப்படுகிறார்கள்


//உணர்வுக்கு மோதிரமிட்டு
என் இதயத்தைக்
கழற்றிக்கொண்டவளே
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்///இது எனக்கு அவள் தரும் சுகம். என் இதயம் திருடுகிறாள் அதனால் ஆயுளெல்லாம் அவள் தன்னை எனக்குத் தருகிறாள் அல்லவா?
சிவா said…
ஆசான் .. சீக்கிரமே ஒரு பெண்ணை தேட வைத்து விடுவீர்கள் போலிருக்கே ... நானும் காதல் கவிதை எழுதி நாளாகி விட்டது :)
புன்னகையரசன் said…
அச்சரா.... போங்க ஆசான்.. நீங்க எப்பவுமே இப்படித்தான்....

நல்லா நல்லா எழுதுறீங்க....

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை விழா நன்றியுரை

காணி நிலம் வேண்டும் பராசக்தி

கண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ