**
36 புழுக்களையும் சேர்த்துத்தான் எரு


புண்படத் தேவையில்லை
புழுக்களையும் சேர்த்துத்தான்
எரு

மரங்களின் வேர்களில்
புழுக்களும் உணவு

தீயவை விழுங்கி
நல்லவையாய் நிமிர்கின்றன
மரங்கள்

காற்றைச்
சுத்திகரிக்கின்றன
நீரை
நிறைக்கின்றன
நிலத்தைப்
புதுப்பிக்கின்றன
நெருப்பின்
உணவாகின்றன
வானம்
தொடுகின்றன

சரித்திரம் மரங்களுக்கே!

5 comments:

அப்பண்ணா said...

வானம் தொடுகின்றன
சரித்திரம் மரங்களுக்கே!


அறிவியல் கவிதை
சரிதான்

பூங்குழலி said...

வானம் தொடுகின்றன
சரித்திரம் மரங்களுக்கே

அருமையான கவிதை புகாரி

சாந்தி said...

>>புண்படத் தேவையில்லை
புழுக்களையும் சேர்த்துத்தான் எரு<<<

அவ்வளவுதான் விஷயமே...


>>>மரங்களின் வேர்களில் புழுக்களும் உணவு
தீயவை விழுங்கி
நல்லவையாய் நிமிர்கின்றன மரங்கள்<<<

அருமை.


>>>காற்றைச் சுத்திகரிக்கின்றன
நீரை நிறைக்கின்றன
நிலத்தைப் புதுப்பிக்கின்றன
நெருப்பின் உணவாகின்றன
வானம் தொடுகின்றன
சரித்திரம் மரங்களுக்கே!<<<<

சரித்திரத்துக்காக அவை ஏங்காவிட்டாலும் உபயோகமான வாழ்க்கை..

புன்னகை மன்னன் said...

பூக்கள் உதிர்த்திடும் மரங்கள் இந்த கவிதைக்கு...

சீனா said...

அன்பின் புகாரி


புழுக்களையும் சேர்த்துத் தான் எரு


உண்மை - வாழ்வியல் தத்துவம்

நல்வாழ்த்துகள்