22

பெண்ணே
நீயொரு பெண்டுலம்
நிமிடத்திற்கொருமுறை
பெரியகாலும்
மணிக்கொருமுறை
சிறியகாலும்
எடுத்துவைத்துக்கொண்டு
உன்னோடு என் தலையெழுத்தும்
இங்கும் அங்குமாய்
ஆடிக்கொண்டேதான் இருக்கிறது
ஒளிமட்டும் போதாதென்று
இருளையும் சேர்த்துச்
சமமாகத் தர
பூமிக்குச் சூரியன்
எனக்கு நீ

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

4 comments:

பூங்குழலி said...

//உன்னோடு என் தலையெழுத்தும்
இங்கும் அங்குமாய்
ஆடிக்கொண்டேதான் இருக்கிறது//

:))))))

சாந்தி said...

ஒளிமட்டும் போதாதென்று
இருளையும் சேர்த்துச்
சமமாகத் தர
பூமிக்குச் சூரியன்
எனக்கு நீ

நன்று..

( பெண்டுலம் என்றதும் கவிஞர் கண்களை சொல்வாரோ என எண்ணினேன்..:) )



--
சாந்தி
கற்றது கைமண் அளவு. கல்லாதது கூகுள் அளவு.

மயூ மனோ (Mayoo Mano) said...

தலை விதியைக் கண்மையில் எழுதி விட்டு நாங்கள் அழிக்க முன் அழிவதைப் பார்க்காது, பெண்டுலமாக ஆடிக் கொண்டிருப்பது நலம் என்று நினைக்கிறேன். கடைசியில் ஆடாது நின்று விட்டாவது நியாயம் கேட்கலாம்..மனதில் நிற்கிறது இந்த வரிகள்.......

சிவா said...

ஒளிமட்டும் போதாதென்று
இருளையும் சேர்த்துச்
சமமாகத் தர
பூமிக்குச் சூரியன்
எனக்கு நீ


அருமை ஆசான் .. இரண்டுமே வேண்டும்