37

உன் இமைகள்
ஓர் ஊசித்துவார அளவுக்கேனும்
அகன்றால் போதும்
என் ஒட்டக உருவையும்
மயிரிழையாய் நீட்டி
எப்படியும் நுழைந்து விடுவேன்
ஆனால் என்முன்
உன் மூடிய விழிகளுக்கு
இமைகளே இல்லாமலல்லவா
இருக்கின்றன

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

3 comments:

ருத்ரா said...

அன்புக்கவிஞர் புகாரி அவர்களே

மூடியவிழிகளுக்குள்
ஊடிப்பாய நினைக்கும்
காதல் வெள்ளம்
உங்க‌ளை காதல் ம‌ய‌க்க‌த்தின்
ப‌டுகுழியில் அல்ல‌வா
த‌ள்ளியிருக்கிற‌து.
ந‌ன்றாய் உற்றுப்பாருங்க‌ள்
அந்த‌ விழிக‌ள்
இமையில்லாம‌ல்
உங்க‌ளை அழைக்கின்ற‌ன‌வே!
இது தான் த‌ருண‌ம்
பாய்ந்து கொள்ளுங்க‌ள்.
அவ‌ள் இமைக‌ள் மூடியிருந்த‌போது
உங்க‌ள் இமைக‌ள் திற‌ந்திருந்த‌ன‌!
உங்க‌ள் இமைக‌ள் ச‌ற்று
மூடிக்கொண்டிருந்த‌ போது
அவ‌ள் இமைக‌ளையே
க‌ழ‌ற்றிவைத்துவிட்டு
வெட்க‌த்தையும்
க‌ளைந்து வைத்துவிட்டு
உங்க‌ள‌யே விழுங்கி விடுவ‌து போல்
அல்ல‌வா
உற்றுப்பார்த்துக்கொண்டிருக்கிறாள்.
உங்க‌ளுக்கு ஏன்
சொர்க்க‌வாச‌ல் திற‌க்க‌வில்லை?
காத‌லிப்ப‌து என்ற‌ கரையையும் தாண்டி
காத‌ல் எனும்
ஒரு போதையின் க‌ட‌லில் அல்ல‌வா
விழுந்து கிட‌க்கிறீர்க‌ள்.
ஆம்.
ஊசிமுனை காதுக்குள்
ஒட்ட‌க‌ங்க‌ள் போனாலும்
ப‌ணக்கார‌னுக்கு சொர்க்க‌ங்க‌ள் ம‌ட்டும் அல்ல‌
காத‌ல‌னுக்கு காத‌லியின் த‌ரிச‌ன‌மும்
கிடைப்ப‌து க‌டின‌ம் தான்.

புகாரி அவ‌ர்க‌ளே
காத‌ல் ஒரு மாய‌ச்சுழ‌ல் என்ப‌தை
மிக‌ அற்புத‌மாய் காட்டியிருக்கிறீர்க‌ள்!
அருமை! அருமை! வெகு அருமை!

இப்ப‌டிக்கு
அன்புட‌ன் ருத்ரா

சிவா said...

அதே கவலை தான் ஆசான் எனக்கும் :)

புன்னகையரசன் said...

ஒன்னுமே புரியல... ஆன புரிஞ்ச மாதிரி இருக்கு..

என்னவா இருக்கும்... ஓ... காதல்...

அழகு ஆசான்..