25

மலர் கேட்டுப் போனேன்
முள் வந்து சேர்ந்தது
மழை கேட்டுப் போனேன்
கண்ணீர் வந்து சேர்ந்தது

இசை கேட்டுப் போனேன்
இடி வந்து சேர்ந்தது
நிழல் கேட்டுப் போனேன்
நெருப்பு வந்து சேர்ந்தது

கவிதை கேட்டுப் போனேன்
வசை வந்து சேர்ந்தது
வரம் கேட்டுப் போனேன்
சாபம் வந்து சேர்ந்தது

எனைக் கேட்டுப் போனேன்
மரணம் வந்து சேர்ந்தது
எதைக்கேட்டுப் போனால்
நீ வந்து சேர்வாய்?

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

9 comments:

Anonymous said...

நல்ல ஏக்கம்!

Anonymous said...

அருமையாக இருக்கிறாது ஆசான்... என்ன கொஞ்சம் நெஞ்சம் கனக்கிறது

Anonymous said...

புகாரி,

கேட்டது கிடைக்காது, கிடைத்ததைக் / கிடைப்பதைக் கேள்.

//எதைக்கேட்டுப் போனால்
நீ வந்து சேர்வாய்? //

சோகம் இழையோடுகிறது. கவிதை ரசிக்கத்தக்க ஒன்று

அன்புடன் ..... சீனா

Anonymous said...

அருமை அண்ணன் புகாரியின்
கவிதை அருமை
கருத்து அருமை
காதல் அருமை
சாபம் அருமை
சாதல் கூட அருமை
அவர் கிடைத்தது
அன்புடன் குழும நண்பருக்கெல்லாம்
பொருமை

அன்புடன் ரசூல்.

சேதுக்கரசி said...

உங்கள் பதிவு தமிழ்மணத்தில் அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள் பகுதியில் வந்துவிட்டது! வாழ்த்துக்கள்!!

Anonymous said...

புகாரி,

கேட்டுப் போகாதீர். கேட்காமலே வரவேண்டும் !
வந்ததைக் கேட்டதாய் கொள்ள வேண்டும்,
அப்பொழுது என்ன செய்யும் வரம் !!!

புன்னகையரசன் said...

இதைத்தான் நானும் கேட்கிறேன்... பதில் இல்லை.... பதில் கிடைத்தல் யாரேனும் உதவுங்கள்...

வாழ்க வளமுடன் அப்பண்ணா said...

எதையும் ****பிளான்**** போட்டு கேட்கணும்
கண்டிப்பா கிடைக்கும் .

பூங்குழலி said...

எனைக் கேட்டுப் போனேன்
மரணம் வந்து சேர்ந்தது
எதைக்கேட்டுப் போனால்

நீ வந்து சேர்வாய்

அருமை ...காதல் வேண்டாம் என்று சொன்னால் வருமோ ?


யாரைக் கேட்கச் சொல்றீங்க? அவனவன் புலம்பிக்கிட்டுத் திரியறான் :)
எஸ்.வி சேகர் நாடகத்தில் ஒரு வசனம் வரும் ,"காதலில் 90% தோற்றவர்கள் தான் .மீதம் 10%பேருக்கு படு தோல்வி ஏனென்றால் அவர்கள் காதலித்தவர்களையே திருமணம் செய்து கொண்டார்கள் ,"என்று .
அதுதான் நினைவுக்கு வருகிறது .திருமணத்தில் முடியும் காதல் நிஜமாகவே முடிந்து விடுகிறது போலிருக்கிறது .தோற்றதாக சொல்லப் படும் காதல் இவ்வாறு தேடல்களில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது .