28

நீ
விழிவீசும்
ஒவ்வொரு கணமும்
உள்ளுக்குள் என்னென்னவோ
உடைந்து சிதறுகின்றன

சிதறித் தெறித்து
கழன்று குழைகின்றன

என்னடீ இது
பார்வையா
பஞ்சபூதப் பசியா

ஒவ்வொன்றாய் எடுத்து
என் உண்டியலில் சேமித்து
செல்வந்தனாகிறேனா

அல்லது
கனவுகளாயும்
கற்பனைகளாயும் செலவழிந்து
பிச்சைக்காரனாகிறேனா

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

5 comments:

Anonymous said...

ஒவ்வொன்றாய்
எடுத்து
என் உண்டியலில்
சேமித்து
செல்வந்தனாகிறேனா
அல்லது
கனவுகளாயும்
கற்பனைகளாயும்
செலவழிந்து
பிச்சைக்காரனாகிறேனா


இரண்டும் பொருந்தும்
அன்புடன்
இக்பால்

Anonymous said...

"பார்வையா ? பஞ்சபூதப் பசியா"
அழகான இராட்சசிகளிடம் மாட்டிக்கொண்டால் இப்படித்தான் கேட்க தோண்றும் ஆசான்

அன்புடன்
சிவா...

சாந்தி said...

அல்லது
கனவுகளாயும்
கற்பனைகளாயும் செலவழிந்து
பிச்சைக்காரனாகிறேனா




இது சரின்னு தோணுது..

--
சாந்தி

பிரசாத் said...

> என்னடீ இது பார்வையா
> பஞ்சபூதப் பசியா

மங்கையரின் விழிகளுக்குத் தான் எத்தனை சக்தி...

புன்னகையரசன் said...

பணக்காரன் ஆகிறேனோ இல்லை பிச்சைக்காரன் ஆகிறேனோ அது முக்கியமில்லை என்று தோன்றுகிறது...

அந்த அனுபவம்.. அந்த நேரம்... கிடைக்குமா..... அனுபவிக்கனும்...

கலக்கல் ஆசான்... போற்றுதும் போற்றுதும்.... காதலை போற்றுதும்