35

ஒரு நாளில்
எதிர்ப்பட்ட அழகியின்
முகம் மறந்துபோகலாம்

ஒரு வாரத்தில்
ரயில் சிநேகிதியின்
முகம் மறந்துபோகலாம்

ஒரு மாதத்தில்
பள்ளித் தோழியின்
முகம் மறந்துபோகலாம்

ஒரு வருடத்தில்
கல்லூரித் தோழியின்
முகம் மறந்துபோகலாம்

ஒரு
யுகம் கழிந்தாலாவது
உன் முகம் மறந்துபோகுமா
என்றிருக்க நீ மறந்து போகலாமா

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

2 comments:

வானம்பாடிகள் said...

:)). நன்று

cheena (சீனா) said...

மறப்பதற்கு காலக்கெடுவா - யுகம் கழிந்தாலாவது மறந்து போகுமா எனில் மறக்க வேண்டுமே முடிய வில்லையே என ஒரு பொருள் தொனிக்கிறதே புகாரி - யுகம் கழிந்தாலும் முகம் மறந்து போகாது என்றிருந்தால் சரியாய் இருக்குமா