**31

பதட்டமாய் இருக்கிறது


நெல்சனும் பீட்டரும்
ஜான்சனைத்
தத்தெடுத்தான்கள்
பிள்ளையாக

அம்மாவும் ஆண் என்று
கொண்டாட்டம்
ஜான்சனுக்கு

மேற்கின்
மயானக்கரைகளெங்கும்
மத்தாப்புத் தோரணங்கள்

கிழக்கின்
கர்ப்ப அறைகளில்தான்
கலாச்சாரக்கதிரவன்
பிறக்கிறான்
எப்போதும்

செத்தே பிறந்துவிடுவானோ
அங்கும் என்று
பதட்டமாய் இருக்கிறது

2 comments:

யாழ்கோபி said...

வலைப்பதிவும் குழுமமும்
கொல்லர் தெருவில் ஊசி விற்ற கதையாக வலைப்பதிவைப் பற்றி வலைப்பதிவிலே சொல்வதும் குழுமம் பற்றி குழுமத்தில் குறிப்பிடுவதம்தான் தமிழ் இணையத்திலே நடைபெறுகிறது தயவு செய்து இரண்டையும் பற்றி நன்கு தெரிந்தவர்கள் வலைப்பதிவிலே குழுமம் பற்றியும் குழுமத்திலே வலைப்பதிவு பற்றியும் குறிப்பிடுக எனக்கே குழுமம் பற்றி தெரியாது யாரும் தெரிந்தால் பின்னூட்டத்திலே குறிப்பிடவும்
எனது மின்னஞ்சல் முகவரி kobisiva@yahoo.com

அன்புடன் புகாரி said...

குழுமம் என்பது சிலர் ஒன்றுகூடி ஒரு குழுவாகி கருத்தாடுவது

வலைப்பூக்கள் என்பது இணையத்தையே ஒரு குழுமமாய் ஆக்க முயற்சிப்பது :)))