யுத்தம்
முத்தத்தில்தான்
இருக்க வேண்டும்
நான்கு உதட்டு ஈர ஆயுதங்கள்
போருக்குத் தயார்
சத்தமே இல்லாத யுத்தம்
கண்கள் இமைக் கேடயங்களுக்குள்
ஓடிப் பதுங்குகின்றன
நரம்புகளெல்லாம்
வீரர்களை உசுப்பேற்ற
ஆர்வத்தோடு ஓடிவருகின்றன
இரண்டு மூளைக்குள்ளும்
ஒற்றை அணுகுண்டு
வெடித்துப் பரவுகின்றது
நெடுநேரம் நீடிக்கும் யுத்தங்கள்
வெற்றியை அறிவிக்கின்றன
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
முத்தத்தில்தான்
இருக்க வேண்டும்
நான்கு உதட்டு ஈர ஆயுதங்கள்
போருக்குத் தயார்
சத்தமே இல்லாத யுத்தம்
கண்கள் இமைக் கேடயங்களுக்குள்
ஓடிப் பதுங்குகின்றன
நரம்புகளெல்லாம்
வீரர்களை உசுப்பேற்ற
ஆர்வத்தோடு ஓடிவருகின்றன
இரண்டு மூளைக்குள்ளும்
ஒற்றை அணுகுண்டு
வெடித்துப் பரவுகின்றது
நெடுநேரம் நீடிக்கும் யுத்தங்கள்
வெற்றியை அறிவிக்கின்றன
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
7 comments:
வெற்றி என்று அறிவிக்கின்றன
இதுவரை எது முழுமையான வெற்றி என்று அறியப்படவேயில்லை அதனால் அறிவிக்கப்படவுமில்லை அதுவரையில் சின்ன சின்ன வெற்றிகளை, வெற்றிகள் என அறிவிப்பு செய்ய படுகின்றன.
கண்களெல்லாம்
ஓடிப் பதுங்குகின்றன
அழகான கவிதை புகாரி
ம்,. பார்வையல்லவா வாள் வீச்சுகள்..?
முடிவற்ற போர்..
கவிஞருக்கு மட்டுமே உணர்வுகளை வடிப்பது கைவந்த கலையோ?.
தோல்வியே
இல்லாதது இந்த
யுத்த முத்தமும்
முத்த யுத்தமும்
அருமை ஆசானே
மூச்சு வாங்குது ......
//கண்களெல்லாம்
ஓடிப் பதுங்குகின்றன//
அழகு... வேற என்னத்த சொல்றது
யுத்தம்
முத்தத்தில்தான்
இருக்க வேண்டும்
நான்கு உதட்டு ஆயுதங்கள்
போருக்குத் தயார் //
ஓஹோ.. உதடுகளை வைத்து எல்லாம் யுத்தம் தொடங்கலாமா?
சத்தமே இல்லாத
யுத்தம் //
இரண்டு உதட்டு ஆயுதம் இருந்தால் மட்டுமே சத்தம் வரும் போல :-)
இது பிரெஞ்சு யுத்தம் அல்லது ஆங்கில யுத்தம் என்று சொல்லலாமா? :-)
கண்களெல்லாம்
ஓடிப் பதுங்குகின்றன
நரம்புகளெல்லாம்
வீரர்களை உசுப்பேற்ற
வெறியோடு ஓடிவருகின்றன
இரண்டு மூளைக்குள்ளும்
சத்தமில்லாத அணுகுண்டுகள்
வெடித்துப் பரவுகின்றன
நீண்ட நேரம்
நீடிக்கும் யுத்தங்கள் மட்டுமே
வெற்றியை அறிவிக்கின்றன //
பாவம் மூச்சு முட்டி ..............................
நல்லதொரு சிந்தனையான கவிதை அண்ணா.
Post a Comment