33

கேட்டுப் பெறும்
பல கோடி முத்தங்களை
வாய் பிளந்த சிப்பிகளாக்கி
ஒற்றை முத்தாய்
நீள் இருட்டைக் கிழித்துப்
பாயும் ஒளிக்கற்றையாய்
உயிர் தீண்டுகிறது
கேட்காமல் பெறும்
ஒரே ஒரு முத்தம்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

4 comments:

மீரான் said...

நல்லா இருக்கு.

ஆனாலும் இதிலும் ஒரு சந்தேகம் :-)

"உயிர் தீண்டுகிறது" - இது எந்த உயிர் தனது உயிரா? அல்லது மற்ற உயிரா?

தனது உயிர் என்றால் - உடலில் இருந்து பிரிந்து உயிர் தீண்டுமா?

தீண்டுவது என்பது (பிற அல்லது மற்றவற்றிலிருந்து தனக்கு உரசுவது அல்லது உராய்வது என்றுதானே பொருள் கொள்ள வேண்டும்? )

இதற்கு உங்கள் விளக்கம் என்னவோ?

ஆம், கேட்காமல் பெறும் ஒரே ஒரு முத்தம் - உடல் அல்லது உயிர் சிலிர்க்கவே செய்யும்

சீனா said...

உண்மை உண்மை புகாரி

தானாகக் கிடைக்கும் முத்தம் - ஏன் எதுவுமே - கேட்டுப் பெறுபவைகளை விட ருசிக்கும்

நல்ல கற்பனை - நல்வாழ்த்துகள்

நட்புடன் ..... சீனா
------------------------------

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

ஆயிஷா said...

ஆசான்
தேடிப் பெறுவதில் தான் இன்பம் அதிகம்
முத்தம் மட்டும் அதற்கு
விதிவிலக்கோ?????????
உங்க கவிதை அழகு. படம் இன்னும் அழகு.
அன்புடன் ஆயிஷா