38

செத்து செத்து சிநேகிக்கும்
பித்துப் பிடித்தவன்
வாழ்வதும் உன் கண்ணீரில்
சாவதும் உன் கண்ணீரில்தான்
துள்ளி நீந்தும் நீரிலேயே
வெந்து குழம்பாகும் மீனைப்போல

கண் உடைத்து நீர் பெருக்கி
வென்றெடுத்துக்கொள்
என்னை உன் விருப்பம்போல
இப்போதும்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

6 comments:

சீதாம்மா said...

வேதனையின் வெடிப்பு
எங்கிருந்தாலும் வாழ்க
கவிதையில் உன் உயிர்த்துடிப்பைக் காண்கின்றேன்
கவிஞன் காதலிக்கக் கூடாது
செத்து செத்து சிநேகித்து
பித்து பிடித்துவிடும்
உன் வேதனைக்கு ஒத்தடம் கொடுக்கும்
நெஞ்சங்கள் உண்டு
நெருப்பினில் இருக்காதே
உன் காதல் சாகாது.

சீனா said...

அன்பின் புகாரி

எப்போதும் காதலிக்கும் காதலன் - நல்ல கவிதை

பிறந்த நீரிலேயே வெந்து குழம்பாகும் மீன் - நல்ல கற்ப்னை

நல்வாழ்த்துகள் நண்ப புகாரி

நட்புடன் ..... சீனா
-------------------------------------

சாந்தி said...

வாழ்வதும் உன் கண்ணீரில்
சாவதும் உன் கண்ணீரில்தான்
துள்ளி நீந்தும் நீரிலேயே
வெந்து குழம்பாகும் மீனைப்போல


நல்ல கற்பனை..

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

பூக்குழலி said...

கண் உடைத்து நீர் பெருக்கி
வென்றெடுத்துக்கொள்
என்னை உன் விருப்பம்போல
இப்போதும்

இந்த நான்கு வரிகளே ஒரு சின்னக் கவிதை தான்

இளங்கோவன் said...

அன்பின் புகாரி

அற்புதமான கற்பனைச் சக்தி உங்களின் வரிகளில் காண்கின்றேன்

வாழ்த்துக்கள்

அன்புடன் இளங்கோவன்.