*** 20  உலகோடு

என்னை
எனக்குப் பிடித்தபோது
இந்த உலகம்
எனக்குப்
பிடிக்கவில்லை

இந்த உலகம்
எனக்குப்
பிடித்தபோது
என்னை எனக்குப்
பிடிக்கவில்லை

8 comments:

முகம்மது ராஜா... said...

என் கடந்தகால வாழ்க்கையில்
ஒரு நேரத்தை கவியில் தந்த உங்களுக்கு
என் நன்றி....

உங்களை நான் ஒன்னே.. ஒன்னுதான் கேட்க ஆசைபடுறேன்.. அது
எப்டி இதெல்லாம் ... ஒக்காந்து யோசிப்பியளோ..? (சும்மா விளையாட்டாக்குத்தான்..))

Unknown said...

உக்காந்து யோசிச்சிருந்தா, இந்தக் கவிதை இத்தனை இயல்பாய் வந்திருக்காது என்று நினைக்கிறேன் ராஜா.

சாந்தி said...

அருமை...

என் சிறு முயற்சியும்..

என்னை நான் அறியாமலே
உலகை குறை சொன்னேன்.

என்னை நான் அறிந்த போது
உலகை நான் வியந்தேன்..




--
சாந்தி
தன்னைப்போல் பிறரையும் நேசி..

சக்தி said...

அன்பின் புகாரி,

உண்மைதான் அனுபவங்கள் முதிர, முதிர அனுபவித்தவைகள் கசக்கத்தான் செய்யும்.

அருமையாக, அர்த்தத்தோடு சொல்லியிருக்கிறீர்கள்

அன்புடன்
சக்தி

துபாய் ராஜா said...

நல்லதொரு கவிதை.

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

பூங்குழலி said...

என்னை
எனக்குப் பிடித்தபோது
இந்த உலகம்
எனக்குப்
பிடிக்கவில்லை

அருமையாக இருக்கிறது

சீனா said...

அன்பின் புகாரி


அருமைச் சிந்தனை

நல்வாழ்த்துகள்

ஆயிஷா said...

நிஜம்......
உலகம் ஒரு மாயை தானே.
அன்புடன் ஆயிஷா