*பொங்கல் வாழ்த்துக்கள்*
இன்று நான் கனடாவில் வாழ்கிறேன். ஆனால் நான் பிறந்ததும் விடலைப் பருவம் முடியும்வரை வளர்ந்ததும் தமிழ் நாட்டில்தான். கிராமங்களால் மட்டுமே சூழப்பட்ட இந்த ஒரத்தநாட்டுக்காரனின் ஒரு கவிதை. பசுமையாய் என் நெஞ்ச வெளிகளில் மிதந்துகொண்டிருக்கும் தை மாதக் கதை.
மஞ்சள் கொத்தோடு
மாமரத்து இலையோடு
இஞ்சித் தண்டோடு
எறும்பூரும் கரும்போடு
வட்டப் புதுப்பானை
வாயெல்லாம் பால்பொங்க
பட்டுப் புதுச்சோறு
பொங்கிவரும் பொங்கலிது
கரும்பைக் கைபிடிக்க
கட்டழகைக் கண்பிடிக்க
குறும்பைச் சொல்பிடிக்க
குமரியிதழ் தேன்வடிக்க
வயலில் வாய்க்காலில்
ஒய்யார நடைநடந்து
பயலும் பொண்ணுகளும்
பாடிவரும் பொங்கலிது
வீட்டுப் பசுமாடும்
வயலேறும் எருதுகளும்
பாட்டுச் சலங்கைகட்டி
பொன்னழகுப் பொட்டுவச்சி
தோட்டத் தெருவெல்லாம்
தொலைதூர வெளியெல்லாம்
ஆட்டம் போட்டுவரும்
அழகுமணிப் பொங்கலிது
மண்ணைக் கையெடுக்க
மனசெல்லாம் மூச்செறிய
பொன்னை அள்ளியதாய்ப்
பெருமிதத்தில் கண்விரிய
அன்னம் கொடுப்பவளின்
அருமைகளை எண்ணிமனம்
நன்றிப் பெருக்கோடு
நிலம்புகழும் பொங்கலிது
இன்று நான் கனடாவில் வாழ்கிறேன். ஆனால் நான் பிறந்ததும் விடலைப் பருவம் முடியும்வரை வளர்ந்ததும் தமிழ் நாட்டில்தான். கிராமங்களால் மட்டுமே சூழப்பட்ட இந்த ஒரத்தநாட்டுக்காரனின் ஒரு கவிதை. பசுமையாய் என் நெஞ்ச வெளிகளில் மிதந்துகொண்டிருக்கும் தை மாதக் கதை.
மஞ்சள் கொத்தோடு
மாமரத்து இலையோடு
இஞ்சித் தண்டோடு
எறும்பூரும் கரும்போடு
வட்டப் புதுப்பானை
வாயெல்லாம் பால்பொங்க
பட்டுப் புதுச்சோறு
பொங்கிவரும் பொங்கலிது
கரும்பைக் கைபிடிக்க
கட்டழகைக் கண்பிடிக்க
குறும்பைச் சொல்பிடிக்க
குமரியிதழ் தேன்வடிக்க
வயலில் வாய்க்காலில்
ஒய்யார நடைநடந்து
பயலும் பொண்ணுகளும்
பாடிவரும் பொங்கலிது
வீட்டுப் பசுமாடும்
வயலேறும் எருதுகளும்
பாட்டுச் சலங்கைகட்டி
பொன்னழகுப் பொட்டுவச்சி
தோட்டத் தெருவெல்லாம்
தொலைதூர வெளியெல்லாம்
ஆட்டம் போட்டுவரும்
அழகுமணிப் பொங்கலிது
மண்ணைக் கையெடுக்க
மனசெல்லாம் மூச்செறிய
பொன்னை அள்ளியதாய்ப்
பெருமிதத்தில் கண்விரிய
அன்னம் கொடுப்பவளின்
அருமைகளை எண்ணிமனம்
நன்றிப் பெருக்கோடு
நிலம்புகழும் பொங்கலிது
5 comments:
அன்பின் புகாரி
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
கவிதை அருமை - கிராமத்துக் கவிதை அருமை
பொங்கல் ஒரத்த நாட்டில் பார்த்ததை அசை போட்டு ஆனந்தித்து கவிதையாய் சமைத்தது நன்று
மஞ்சள் கொத்து - மாவிலை - இஞ்சி - கரும்பு - பானை வாயில் பால் - பட்டுச்சோறு பொங்கல் - கையில் கரும்பு - கண்ணில் கட்டழகு - சொல்லில் குறும்பு - இதழில் தேன் - பயலும் பொண்ணுகளும் ( ஒருமையும் பன்மையுமா ) - பசு எருது பாட்டுச் சலங்கை - பொன்னழகுப் பொட்டு - ஆட்டம் போடும் பொங்கல் - பெருமிதப் பொங்கல் - நிலம்வணங்கும் பொங்கல்
அருமையான கவிதை - வாசித்தமை நன்று - குரல் நன்று - கானொளி அருமை
வாழ்த்துகள் புகாரி - பொங்கல் நல்வாழ்த்துகள்
வாழ்த்துக்களா - வாழ்த்துகளா
எங்க வீட்ல பொங்கல் பொங்கிருச்சு உங்க கவிதை போல...
பொங்கலோ பொங்கல்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்
It's nearly іmpossible to find knowledgeable people for this subʝect, ƅut you seem like ƴou know what
you're talking aboսt! Thanks
my blog poѕt; Woman At Coast Overlooking Ocean
Great delivery. Outstanding arguments. Keep up the great
work.
Post a Comment