***13

அதே நிலா

மூன்றாம் பிறையும்
அமாவாசையும்
நிலவிடமில்லை

பார்வைகளும் கோணங்களும்
முட்டிக்கொள்ளும்போது
எங்கோ தொலைதூரத்தில்
தேம்பி அழுகிறது
உண்மை

நிஜம்
வெளிவராமலேயே
புதைக்கப்படுவதும்
சுகமாகப் பிரசவிக்கப்படுவதும்
ஆழ்ந்த அனுபவத்திடமும்
நம்பிக்கையிடமும் உள்ளது

வாதிடுவதற்காகப்
பேசத் தொடங்கினால்
எதுவும்
பேசப்படப் போவதே இல்லை

பேசுவதற்கே
வாதிடக் கூடிய நிலை
அதனினும் அவலம்

எவ்வழியே யாதறியினும்
முடிவிலா
ஞான அலசலுக்குள்ளாக்குவதே
தெளிந்த நல்லறிவு

4 comments:

Nandu said...

காலை எழுந்தவுடன் இதைப் படித்தேன். உங்கள் தெளிந்த வார்த்தைகள் மற்றும் எளிய நடை நீங்கள் சொல்வது போல்
"நிகழ்ச்சி என்னவோ
ஒன்றே ஒன்றுதான்"
கவிதை என்னவோ ஒன்றே ஒன்று தான். ஆனால் எனக்கு ஓர் புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது.
மிக்க நன்றி.

Siva said...

Sivasubramanian R - உண்மை
வெளிவராமலேயே
புதைக்கப்படுவதும்
சுகமாகப் பிரசவிக்கப்படுவதும்
ஆழ்ந்த அனுபத்திடமும்
நம்பிக்கையிடமும் உள்ளது

Arumaiyana varikal aasan

சீனா said...

சீனா ..... Cheena

அன்பின் புகாரி

தத்துவம் உண்மை - அனைவருக்கும் தெரிந்ததே !

நிலா ஒன்றுதான் - பார்க்கும் பார்வை வெவ்வேறு - அவ்வளவுதான்

அலசி ஆய்ந்து முடிவுக்கு வரவேண்டும்

சிந்தனை நன்று நல்வாழ்த்துகள் புகாரி

நட்புடன் சீனா

கவிதன் said...

அற்புதமான படைப்பு கவிஞரே !!!