கனடா தமிழர் பாரம்பரிய உணவுத் திருவிழா

கனடா தமிழர் பாரம்பரிய உணவுத் திருவிழா

https://photos.app.goo.gl/6CCPvh59zWbr1JcZ9

விளையாட்டாகத் தொடங்கினேன். மிகச் சிறப்பாகச் சென்றது.

நட்புகளுக்குள் ஒன்றுபட்டோம். கூட்டாஞ்சோறு சமைத்துக்கொண்டுவந்து என் வீட்டில் ஒன்றுகூடினோம்

ஒவ்வொரு உணவும் ருசியில் மிக உயர்வாக இருந்தது. சிறந்த உணவிற்கு பரிசுகள் வழங்கினோம்

குழந்தைகளை ஆங்கிலத்தைத் தமிழில் மொழிபெயர்க்கச் சொல்லியும் தமிழை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கச் சொல்லியும் போட்டி வைத்து பரிசுகள் வழங்கினோம்

நித்தம் நித்தம் நெல்லுச்சோறு பாடினார்கள் பெண்கள்

தேவாரத்திலிருந்து ஓர் ஆரமாய் சம்பந்தரின் கவிதையை இனிமையாய் தமிழ் உச்சரிப்பு மாறாமல் வாசித்தான் 8 வயது எழில். பரிசு பெற்றான்

பாரம்பரிய நடனமாடியது 8 வயது தெனிஷா, பரிசு பெற்றது

பெண்களெல்லாம் தங்களையும் தங்கள் கணவரையும் தங்கள் குடும்பத்தையும் அறிமுகம் செய்தார்கள் அனைவருக்கும்

முத்தாய்ப்பாக ஈழத் தமிழ் எழுத்தாளர் சிவநயனியின் பாரம்பரிய உணவான மச்சக்கூழ் விருந்து தந்தது ஒரு வித்தியாசமான சிறப்பு. தமிழ்நாட்டின் உணவுகளைச் ருசித்த நாவுகள் மச்சக்கூழை மிச்சமின்றி துழாவிச் சுவைத்தன.

ஆறு மணி நேரம் எப்படிக் கழிந்ததென்றே தெரியாமல் போனதாக ஒவ்வொருவரும் உணர்ந்தோம்

சிறப்பித்த அனைவருக்கும் என் நன்றிமாமழை

அன்புடன் புகாரி

No comments: