>>>ஸிந்தனை ஸம்பவம்
பாஹுபலி முதற்கொண்டு காஹம் பஞ்ஜி வரைக்கும் இன்று எழுத்து மாறிநிற்கின்றது. இந்த இழையில் புகாரியவர்களின் கருத்துகளை மறுக்காவிடில் அவற்றையும் மறுக்கமுடியாது.வேல்முருகன் சுப்பிரமணியன்<<<
இதில் நியாயம் இல்லையே?
நான் நல்ல தமிழ் எழுதுகிறேன். கஷ்டம் என்ற சொல்லை கடினம் என்றே சொல்வேன்
விஷம் என்ற சொல்லை விசம் என்றே பலகாலும் எழுதிவருகிறேன். இன்னும் நஞ்சு என்று முழுதாகவே தவிர்க்கிறேன்.
வேஷ்டி முஷ்டி புஷ்டி என்று எல்லாம் எழுதுவதில்லை
என் பழைய கவிதைகளில் உள்ள நிஜம் என்ற சொல்லையும் மாற்றிவருகிறேன்.
நான் தெளிவான தமிழ்த் திசையில் செல்பவன். ஏனெனில் நான் தமிழின் காதலன்.
ஊரில் நான் தமிழில் ஆங்கிலம் கலவாமல் பேசும்போது என்ன ஒருமாதிரி பேசுகிறாய் என்றுதான் கேட்கிறார்கள்.
மலையாளம் தோன்றியது வடசொற்களை 90% ஏற்றதால். ஏற்றபின் எழுத்தைக் கொண்டுவந்தார்கள்.
நாமும் ஏற்றோம் ஒரு பத்து விழுக்காடு இருக்கும். இன்று அதையும் விரட்டியடிக்கிறோம். அதுதான் உண்மையான தமிழ்த்தமிழ்த் தொண்டு. அது வாழ்க வளர்க.
தமிழ் வாழும் மொழுயாய் வாய்மொழியாய் இருக்க வேண்டும் என்பதே என் தேவை. பேச வருபவனையும் குசுப்பு... இடமாசுகசு... குசுவந்த சிங்கு... என்றெல்லாம் சொல்லி ஓட வைக்க என்னால் முடியாது. தமிழன்னை என்னை மன்னிக்க மாட்டாள்
1.
ini solvatharkku onnum ille. ellaam sollitten
என்று எழுதுபவர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்
எனக்கு யார் அப்படி மடல் அனுப்பினாலும், மன்னிக்கவும் என்னால் வாசிக்க முடியவில்லை. ஒன்று
தமிழில் எழுதுங்கள் அல்லது ஆங்கிலத்தில் எழுதுங்கள் என்று சொல்லிவிடுவேன்
2.
அடுத்து புலம்பெயர் பிஞ்சுகள் முழுதாக அந்த அந்த நாட்டின் மொழிக்குள் சென்றுவிட்டனர். அவர்களை மீட்டெடுக்காமல் தமிழ் வாய்மொழியாய் இருக்காது
3.
அடுத்து தமிழைக் கவிதை மொழியாய் மட்டுமே பாவிப்பது பிழை. அதை அறிவியல் மொழியாய்க் கணித மொழியாய் வளர்த்தெடுக்க வேண்டும். அதற்கு சொற்களை நோண்டிக்கொண்டிருக்காமல், அந்தந்த அயல்சொற்களை அப்படியே ஏற்று அறியல் அறிவை விரைந்து வளரச் செய்ய வேண்டும்.
ஆக்சிஜன் அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும், ஹீலியம் அப்படியே இருக்கட்டும், மைல் கிலோ என்றெல்லாம் நாம் ஏற்றுக்கொண்டு கெட்டா போய்விட்டோம்
4.
இலவசத் தமிழ் வகுப்பு இலவச தமிழ் உணவு இலவச பேருந்துசேவை செய்து புலம்பெயர்த் தமிழ்ப் பிஞ்சுகளை மீட்டெடுப்பதே எல்லாவற்றுக்கும் மேலான என் தொண்டாய் இருக்கும். செய்வேன் இறைவன் அருளால்.
தொடங்கிவிட்டேன், என் பணிச்சுமைகளுக்கிடையில் அதை உலகெங்கும் கொண்டு செல்கிறேன்...
துணை நிற்போரை நற்றமிழர் என்று நெஞ்சாரப் புகழ்வாள் தமிழன்னை என்று திடமாக நம்புகின்றேன்
அன்புடன் புகாரி

No comments: