குறைகளைக் கண்டுபிடித்துவிட்டால் பின் நிவர்த்திகளைக் கண்டுபிடிப்பது எளிது
ஒரு நக்கீரன் பல நல்ல இலக்கியத்திற்குக் காரணமாய் இருந்திருக்கிறான்
நடைமுறைச் சிக்கலே ஏதென்றறியாதவன் பழமையில் உறைந்து அப்படியே உதிர்ந்தும் விடுகிறான்
வரட்டுத்தனம் தவிர்த்து ஆக்கப்பூர்வ செயலில் ஈடுபட்டால் தமிழ் தழைத்துச் செழிக்கும்
தமிழில் அறிவியலில் செல்லவேண்டிய தூரம் மிக அதிகம்
ஆக்ஸிஜன் என்று எழுத அனுமதிக்காத நிலையில் அறிவியல் கல்வி துரிதமாக வளர வழியே இல்லை
உயிர்க்காற்று, பிரானவாயு என்று ஆரம்பித்துவிடுவார்கள். கல்விபயிலும் கன்றுகளைக் கொன்றெடுப்பார்கள்.
இட்லியை தமிழன் கண்டுபிடித்தான் அது இட்லி என்றுதான் உலக மொழிகள் அனைத்திலும் புழங்கப்படவேண்டும்
அதுபோலத்தான் ராக்கெட்டும், நீயூட்ரானும், ஹீலியமும்...
ஒவ்வொன்றையும் குழப்பிக்கொண்டிருந்தால், கற்பதுதான் தடைபடும் அல்லது மந்த நிலையில் செல்லும்
அறிவியல் கற்க தமிழறிஞனாய் இருக்கவேண்டிய அவசியல் இல்லை
அன்புடன் புகாரி

No comments: