இலக்கணம் என்பது
ஆணி அடித்து நிறுத்தப்பட்டதல்ல
நிறுத்தப்படவும் கூடாது
மொழி வளரக் கூடியது
அதன் வளர்ச்சியைத் தடுக்கும்
சக்திகளைத் தாண்டி
அது செழித்து வளரக்கூடியது
தமிழ் மொழியும்
அப்படியான மொழிகளுள் ஒன்று
இன்றும் என்னை
யாப்பு கோத்து
மரபுக்கவிதைதான்
நீ எழுதவேண்டும் என்று
வம்படியாய் வாதிடும்
பழமைவாதிகள் இருக்கிறார்கள்
தமிழ் இலக்கணம் தாண்டி
நீ கவிதை எழுதக் கூடாது
உனக்குத் தமிழ் இலக்கணம்
தெரியவில்லை
நீ கவிஞன் இல்லை
என்றெல்லாம்
சினம் ஊூட்டப் பார்க்கிறார்கள்
ஆனால்
நான் சினம் கொள்வதில்லை
தக்க பதிலை உரைத்துவிட்டு
என் தமிழோடு தமிழாகி
தமிழ்க் கவிதைகள் படைத்து
தமிழுலகிற்கு விருந்து வைக்கிறேன்
வாழ்க தமிழ்
வெல்க வளர் தமிழ்த் தேன்மொழி
கவிஞர் புகாரி

No comments: