வாட்சப்
WhatsApp என்பதைப் புலனம் என்கிறார்கள்
சிலர். என்னாப்பு என்கிறார்கள் சிலர். வாடுசுஅப்பு என்கிறார்கள் சிலர் இப்படியாய்
இன்னும் ஏராளம் பல்கிப் பெருகிச் செல்கின்றன
WhatsApp என்று ஆங்கிலத்தில் ஒரு சொல்லும் இல்லை.
அது ஒரு நிறுவனத்தின் பெயர்.
செய்திகளைப் பகிர்வது அதன் சேவை.
அவ்வளவுதான்.
இதற்கான தமிழ்ச் சொல்லாக்கம் அவசியமற்றது
மைக்ரோ சாப்டுக்கு என்ன தமிழ்ச்சொல்லாக்கம்
வைத்திருக்கிறார்களோ எனக்குத் தெரியாது. இதே வேலையாய் அலைகிறார்கள் சிலர்.
வாட்சப்பை நான் வாட்சப் என்றே அழைப்பேன்.
ஏன் என்கிறீர்களா? காரணம்
இதோ...
Whats என்பது What's up என்ற ஆங்கிலக் கொச்சை வழக்கு
What’s up is an informal greeting (“Hey, buddy,
what’s up?”),
இப்படி ஹே படி வாட்சப் என்று சொல்வது தமிழ் வழக்கப்படி
அண்ணே அண்ணாத்தே அண்ணாச்சி, டேய், பையா, எப்படி? என்ன புதினம்? என்பதுபோல
ஊருக்கு ஊர் மாறும்.
App என்பது Application என்பதன் சுருக்கம்.
இனி ஜாலியாக ஒரு சொல்லாக்கம் பார்க்கமால் இதற்கு?
;-)

Whats Wha's up இன் சுருக்கம்
அண் அண்ணாத்தேயின் சுருக்கம்
அண் அண்ணாத்தேயின் சுருக்கம்
App Application னின் சுருக்கம்
நிர் நிரலியின் சுருக்கம்
நிர் நிரலியின் சுருக்கம்
அப்படீன்னா? அப்படியே
வெள்ளைக்காரனை அடியொற்றி....
அண்நிர் என்று அழகாக அழைக்கலாமா
;-)

WhatsApp என்றால் அண்நிர்
எப்புடீ ??
;-)
;-)


No comments:
Post a Comment