*** 34 நட்பு ஒளி

கட்டாயங்கள்
கண்ணகியின் காற்சிலம்புகளைப்போல
கழற்றி எறியப்படட்டும்
அவற்றிலிருந்து தெறிக்கும்
மாணிக்கப் பரல்கள்
நட்பு ஒளியைச்
சூரிய ஒளியாய் வீசட்டும்

4 comments:

சக்தி said...

அன்பின் நண்பரே புகாரி,

கருத்துப் புதையல் அபாரம்.


அன்புடன்
சக்தி

வேந்தன் அரசு said...

கட்டாயம் இருந்தால் நட்பு இல்லைதான்

வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
”உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே.”

N Suresh said...

கண்ணகியின் காற்சிலம்புகளைப் போல் என்ற உவமை எனக்கு விளங்கவில்லை...

உங்கள் விரிவுரை தேவை.

அன்புடன் என் சுரேஷ்

அன்புடன் புகாரி said...

சுரேஷ்,

நட்பில் கட்டாயப்படுத்துதல் கூடாது. அல்லது நட்பு எதையும் கட்டாயப்படுத்தக் கூடாது.

கண்ணகி காற்சிலம்புகளை எடுத்து பாண்டிய சபையில் எறிந்து உடைக்கிறாள் உண்மையை வெளிக்கொண்டுவருவதற்காக, அதை உலகம் அறிவதற்காக.

அந்த மாணிக்கப்பரல்கள் உண்மையை உரைத்ததுபோல் நட்பு ஒளியை இந்த மாணிக்கப்பரல்கள் உயர்த்திக் காட்டட்டும். அதற்காக காற்சிலம்புகளைப்போல கட்டாயங்கள் உடைத்தெறியப்படட்டும் என்பதே கவிதை.

விளக்கம் கேட்டதற்கு நன்றி சுரேஷ்