நான் நானாக

அவன் அவனாக வாழ்ந்த
நாட்கள் குறைவு

நேற்றைய இருட்டு
இன்றைய வெளிச்சம்

இன்றைய வெளிச்சம்
நாளைய இருட்டு

எதிலும் எவனுக்கும்
தெளிவு என்பது நிரந்தரமல்ல
சந்தேகம் என்பதும் சாசுவதமல்ல

ஒரு சந்தேகம் தெளிவாகி
மறுபொழுதில் அந்தத் தெளிவே
ஒரு சந்தேகமாகி
அவனைத் 'தேடு' என்று
கட்டளையிட்டுவிடுகிறது

இதுதான் நான் என்று
திட்டமிட்டுக் கூறியவர்களெல்லாம்
அது அன்று தோன்றியது
இன்றல்ல என்பதைத் தாங்களே அறிந்தபின்
சிலர் அறிக்கையாய் வெளியிட்டும்
சிலர் அடிமனதில் பூட்டிக் கொண்டும்
நடக்கிறார்கள்

மனதின் ஏதோ ஓர் ஓரத்தில்
மச்சங்களின் மிச்சங்களாய்
இருந்த எத்தனையோ
சந்தர்ப்பங்கள் கைகுலுக்கியபோது
தீப்பொட்டுக்களாய் எழுந்து
கொள்ளியிடும் நெருப்பாய்
விசுவரூபம் எடுத்திருக்கின்றன

சிலருக்கு
இது எங்கிருந்து வந்தது
என்பதே அறியாமல்
திடீரென்று எழுந்துத்தாக்கி
அவர்களின் அவர்களை
குழிதோண்டிப் புதைத்திருக்கிறது

ஆக
அவனவனுக்குள்
எல்லாமும்தான் இருக்கின்றன

ஆயினும்
இந்தச் சமுதாயத்துக்காகப்
போட்டுக்கொண்ட
பொய்வர்ண முகத்துடன்தானே
அவன் நாளும் அலைகிறான்

கேட்டால்
அறியாமையின் வெண்சாமர வீசலில்
உறங்கிக்கொண்டு
பொய்முகமே அவனின்
நிஜமுகம் என்கிறான்

எப்படியோ
அவன் அவனாக இல்லை

அவனைப்போல
நான் நானாகவே
நீங்கள் நீங்களாகவே வாழ்ந்த
நாட்கள் குறைவுதானே?

5 comments:

சாந்தி said...

அவன் அவனாக வாழ்ந்த
நாட்கள் குறைவு
ஆம்


நேற்றைய இருட்டு
இன்றைய வெளிச்சம்
இன்றைய வெளிச்சம்
நாளைய இருட்டு
:))))
எதிலும் எவனுக்கும்
தெளிவு என்பது நிரந்தரமல்ல
சந்தேகம் என்பதும் சாசுவதமல்ல

ஒரு சந்தேகம் தெளிவாகி
மறுபொழுதில் அந்தத் தெளிவே
ஒரு சந்தேகமாகி
அவனைத் 'தேடு' என்று
கட்டளையிட்டுவிடுகிறது

ஆமாம் புகாரி //ஆனா கொஞ்சம் தலைய சுத்துது

இதுதான் நான் என்று
திட்டமிட்டுக் கூறியவர்களெல்லாம்
அது அன்று தோன்றியது
இன்றல்ல என்பதைத் தாங்களே அறிந்தபின்
அறிந்தால் தானே ?

சிலர் அறிக்கையாய் வெளியிட்டும்
சிலர் அடிமனதில் பூட்டிக் கொண்டும்
நடக்கிறார்கள்

ஆமாம் ...சில நேரங்களில் அது கூட நல்லது தான்

மனதின் ஏதோ ஓர் ஓரத்தில்
மச்சங்களின் மிச்சங்களாய்
இருந்த எத்தனையோ
சந்தர்ப்பங்கள் கைகுலுக்கியபோது
தீப்பொட்டுக்களாய் எழுந்து
கொள்ளியிடும் நெருப்பாய்
விசுவரூபம் எடுத்திருக்கின்றன

சிலருக்கு
இது எங்கிருந்து வந்தது
என்பதே அறியாமல்
திடீரென்று எழுந்துத்தாக்கி
அவர்களின் அவர்களை
குழிதோண்டிப் புதைத்திருக்கிறது

ஆக
அவனவனுக்குள்
எல்லாமும்தான் இருக்கின்றன

கவிதையின் விடை ?

ஆயினும்
இந்தச் சமுதாயத்துக்காகப்
போட்டுக்கொண்ட
பொய்வர்ண முகத்துடன்தானே
அவன் நாளும் அலைகிறான்

சமூகத்திற்கு நிஜ முகத்தைக் காணும் ஆவல் இருக்கிறதா ?

கேட்டால்
அறியாமையின் வெண்சாமர வீசலில்
உறங்கிக்கொண்டு
பொய்முகமே அவனின்
நிஜமுகம் என்கிறான்

பழகிப் போனதால்

எப்படியோ
அவன் அவனாக இல்லை

அவனைப்போல
நான் நானாகவே
நீங்கள் நீங்களாகவே வாழ்ந்த
நாட்கள் குறைவுதானே?
அருமை .நிஜம் நூற்றுக்கு நூறு .

சந்தர் said...

உண்மைதான், சாப்பிடுவது, தூங்குவது இந்த இரு காரியங்களை தவிர மற்றெல்லாம் பிறருக்காகவே செய்கிறோம்.

வாழ்க வளமுடன் அப்பண்ணா said...

அவனவனுக்குள்
எல்லாமும்தான் இருக்கின்றன
முற்றலும் உண்மையே
தேடினால்தானே

ஆயினும்
இந்தச் சமுதாயத்துக்காகப்
போட்டுக்கொண்ட
பொய்வர்ண முகத்துடன்தானே
அவன் நாளும் அலைகிறான்
இவன் முகத்தை இவன் பார்க்க
நேரம் இல்லாததால்

கேட்டால்
அறியாமையின் வெண்சாமர வீசலில்
உறங்கிக்கொண்டு
பொய்முகமே அவனின்
நிஜமுகம் என்கிறான்
தெரிந்தும் தெரியாது போல் நடிக்கின்றான்


எப்படியோ
அவன் அவனாக இல்லை
அவனைப்போல
நான் நானாகவே
நீங்கள் நீங்களாகவே வாழ்ந்த
நாட்கள் குறைவுதானே?

அவ்வாறு வாழ்ந்து விட்டால்
அது அல்லவா வாழ்க்கை
அவரவர் அவரவர் வாழ்க்கையை
வாழ்தல் இன்பமே..........

பூங்குழலி said...

அவன் அவனாக வாழ்ந்த
நாட்கள் குறைவு
ஆம்


நேற்றைய இருட்டு
இன்றைய வெளிச்சம்
இன்றைய வெளிச்சம்
நாளைய இருட்டு
:))))
எதிலும் எவனுக்கும்
தெளிவு என்பது நிரந்தரமல்ல
சந்தேகம் என்பதும் சாசுவதமல்ல

ஒரு சந்தேகம் தெளிவாகி
மறுபொழுதில் அந்தத் தெளிவே
ஒரு சந்தேகமாகி
அவனைத் 'தேடு' என்று
கட்டளையிட்டுவிடுகிறது

ஆமாம் புகாரி //ஆனா கொஞ்சம் தலைய சுத்துது

இதுதான் நான் என்று
திட்டமிட்டுக் கூறியவர்களெல்லாம்
அது அன்று தோன்றியது
இன்றல்ல என்பதைத் தாங்களே அறிந்தபின்
அறிந்தால் தானே ?

சிலர் அறிக்கையாய் வெளியிட்டும்
சிலர் அடிமனதில் பூட்டிக் கொண்டும்
நடக்கிறார்கள்

ஆமாம் ...சில நேரங்களில் அது கூட நல்லது தான்

மனதின் ஏதோ ஓர் ஓரத்தில்
மச்சங்களின் மிச்சங்களாய்
இருந்த எத்தனையோ
சந்தர்ப்பங்கள் கைகுலுக்கியபோது
தீப்பொட்டுக்களாய் எழுந்து
கொள்ளியிடும் நெருப்பாய்
விசுவரூபம் எடுத்திருக்கின்றன

சிலருக்கு
இது எங்கிருந்து வந்தது
என்பதே அறியாமல்
திடீரென்று எழுந்துத்தாக்கி
அவர்களின் அவர்களை
குழிதோண்டிப் புதைத்திருக்கிறது

ஆக
அவனவனுக்குள்
எல்லாமும்தான் இருக்கின்றன

கவிதையின் விடை ?

ஆயினும்
இந்தச் சமுதாயத்துக்காகப்
போட்டுக்கொண்ட
பொய்வர்ண முகத்துடன்தானே
அவன் நாளும் அலைகிறான்

சமூகத்திற்கு நிஜ முகத்தைக் காணும் ஆவல் இருக்கிறதா ?

கேட்டால்
அறியாமையின் வெண்சாமர வீசலில்
உறங்கிக்கொண்டு
பொய்முகமே அவனின்
நிஜமுகம் என்கிறான்

பழகிப் போனதால்

எப்படியோ
அவன் அவனாக இல்லை

அவனைப்போல
நான் நானாகவே
நீங்கள் நீங்களாகவே வாழ்ந்த
நாட்கள் குறைவுதானே?
அருமை .நிஜம் நூற்றுக்கு நூறு .

ஆயிஷா said...

அவனைப்போல
நான் நானாகவே
நீங்கள் நீங்களாகவே வாழ்ந்த
நாட்கள் குறைவுதானே?


நிஜம் ஆசான்.
அன்புடன் ஆயிஷா