சட்டமா? சிந்தனையா? எது சரி? ஏன்?

இந்தியா,அமெரிக்கா,கனடா,ஐரோப்பா என ஜனநாயக நாடுகள் அனைத்திலும் அபார்ஷன் செய்யும் உரிமை பெண்களுக்கு சட்டபூர்வமாக வழங்கப்பட்டிருக்கிறது என்றார் ஒரு நண்பர்.

சில நாடுகளில் பெண்கள் விபச்சாரம் செய்வது சட்டபூர்வமாக ஆக்கப்பட்டிருக்கிறது.

சில நாடுகளில் யாரும் எவருடன் வேண்டுமானாலும் உடலுறவு கொள்ளலாம், அதெல்லாம் சட்டத்தின் பிரச்சினை இல்லை என்கிறது.

இந்த சட்டப்பூர்வம் என்பதை முதலில் ஒதுக்கி வையுங்கள். அது நாட்டுக்கு நாடு மாறுபடுவது. மதக்கருத்துக்களை ஒதுக்கி வையுங்கள். அதுவும் மதத்துக்கு மதம் மாறுபடுவது.

உங்கள் கருத்து என்ன? ஏன்? என்று விளக்கமாக எழுதுங்கள். அதுவே நாளையை முடிவுசெய்யும். சட்டம் சொல்வதை நீங்கள் திருப்பிச் சொல்வதற்கு நீங்கள் ஏன் வேண்டும். நான் நேரே சட்டத்தைப் பார்த்துக்கொள்வேனே?

இந்த நாட்டின் சட்டங்களை இயற்றியவர்கள் விவரம் தெரியாமலா சட்டங்களை இயற்றினார்கள் என்கிறீர்கள், ஒவ்வொரு முறையும் சட்டத்தை மாற்றுகிறார்களே, என்றால் முன்பு விபரம் தெரியாமல்தானே செய்திருக்கிறார்கள் என்கிறேன் நான்.

ஆளும்கட்சி மாறும்போதெல்லாம் சட்டமும் மாறுகிறது. ஆட்சி மாறியதும் மீண்டும் தடுக்கப்பட்ட ஒரு சட்டமே முறையானதாகிறது. ஏன்? எப்படி?

சட்டமே அனுமதிக்கும்போது நாம் அதை தடுக்க நமக்கு என்ன உரிமை இருக்கிறது புகாரி என்கிறீர்கள், இன்று ஒரு சட்டம் நாளை இன்னொரு சட்டம். நாம் சட்டத்தையே தவறு என்று கூறும் சிந்தனை ஓட்டம் உடையவர்களாக இருக்க வேண்டும். இல்லாவிடால் கருத்தாடல் எதற்கு என்கிறேன் நான்

1 comment:

தருமி said...

புரியலை .....