இலக்கியத்தை வாழ்கிறேன்

வாழ்க்கையில்
நான்
வாழ்க்கை
தேடத்தொடங்கியதும்
இலக்கியம்
என்னைத்
தேடத்தொடங்கிவிட்டது

எனக்கு
வாழ்க்கை
வாசிலில் நின்றது

இலக்கியத்திற்கு
நான்
முற்றத்தில் கிடைத்தேன்

இலக்கியம்
எனக்குக் கிடைத்துவிட்டது
வாழ்க்கைக்கு
நான் கிடைத்துவிட்டேன்

வாழ்க்கை
என்னை வாழ்கிறது
நான்
இலக்கியத்தை வாழ்கிறேன்

7 comments:

Sakthi said...

அன்பின் புகாரி,

மற்றொரு முத்து
மலையாய்க் கோர்க்கவா ?

>> வாழ்க்கை என்னை
வாழ்கிறது
நான் இலக்கியத்தை
வாழ்கிறேன் >>

அருமையான விளக்கம்

அன்புடன்
சக்தி

Kandavanam said...

நல்ல அனுபவம்.

வாழ்த்துக்கள்!

அன்புடன்,

வி.க.

Selvi Shankar said...

இலக்கியம் என்பதே வாழ்க்கைதான். அதில் வாழ்வது தனி சுவை.

அன்புடன் ..... செல்வி ஷங்கர்

சீதாம்மா said...

ஏதோ ஒரு நிரடல்

பூங்குழலி said...

வாழ்க்கை என்னை
வாழ்கிறது

அழகு

சாந்தி said...

நாம் தேடியதைவிட நம்மை தேடியதையே வாழ்கிறோமோ

என் சுரேஷ் said...

அன்பினிய புகாரி,

உங்கள் புகைப்படமும் சிந்தனையில் மூழ்கியுள்ளதே!


//இலக்கியத்தை வாழ்கிறேன் //


தலைப்பே கொஞ்சம் தலைச்சுற்ற செய்து, பிறகு தான் புரிந்துகொண்டேன்.
அருமை! இலக்கியம் உங்களிலும், உங்களில் இலக்கியமும் தொடர்ந்து வாழ என் இனிய வாழ்த்துக்கள்.//வாழ்க்கையில்

நான்
வாழ்க்கை
தேடத்தொடங்கியதும்
இலக்கியம்
என்னைத்

தேடத்தொடங்கிவிட்டது//

இது எப்படி? இலக்கிய தாகத்தால் தாங்களல்லவோ அதை தேடியிருந்திருக்க வேண்டும். ம்ம்ம். நீங்கள் இலக்கிய காதாலரோ?
//எனக்கு

வாழ்க்கை
வாசிலில் நின்றது

இலக்கியத்திற்கு
நான்
முற்றத்தில்
கிடைத்தேன்//

இலக்கிய காதல்!!! பாராட்டுக்கள்//இலக்கியம்

எனக்குக்
கிடைத்துவிட்டது

வாழ்க்கைக்கு
நான்

கிடைத்துவிட்டேன்//

அருமை! தொடரட்டும் இந்த இனிய பயணம்!//வாழ்க்கை என்னை

வாழ்கிறது
நான் இலக்கியத்தை

வாழ்கிறேன்//

"வாழ்க்கை என்னில் வாழ்கிறது; நான் இலக்கியத்தில் வாழ்கிறேன்" என்று மேற்கண்ட நான்கு வரிகளை புரிந்துகொள்ளலாமா?

நல்வாழ்த்துக்கள் புகாரி!

தொடர்ந்த பல கவிதைகள் உங்களிலிருந்து மலர எனது அன்பான வாழ்த்துக்கள்.

பாசமுடன் என் சுரேஷ்