ஊருக்குச் சேவை

குடும்பத்துக்கு சேவை செய்துவிட்டு மீதமிருக்கும் நேரத்தில் உலகுக்குச் சேவை செய்பவன் பொதுஜனக்காரன்.உலகுக்கு சேவை செய்துவிட்டு மீதமிருக்கும் நேரத்தில் குடும்பத்துக்குச் சேவை செய்பவன் மகாத்மா. குடும்பத்தையே துறந்து உலகுக்கு சேவை செய்பவன் துறவி.

நான் மாற்றுக்கருத்து உடையவன்.

ஊருக்குச் சேவை செய்து வீட்டைச் சாகடித்தால் அவன் சேவை போலியானது. ஏனெனில், அவனுக்குத் தேவை வெறும் புகழ் மட்டுமே. வீட்டில் உள்ளவர்களும் உயிர்கள்தான் அவர்கள் அவனை நம்பி வந்தவர்கள். தன்னை நம்பியவர்களையே காப்பாற்றாதவன் ஊரைக் காப்பாற்றினான் என்பது நகைப்புக்குரியது.

ஊரையும் குழும்பத்தையும் ஒன்றாகப் பார்ப்பவன்தான் உண்மையான சேவைக்காரன். பாரபட்சமாக தொண்டு செய்பவன் தொண்டுசெய்பவனல்ல சூது செய்பவன். தன் சுயநலம் ஒன்றே பெரிதெனக் கொண்டவன். அவன் சுயநலம் என்பது தான் சரித்திர புருசனாய் ஆவது என்பது.

குடும்பத்தையே துறந்து உலகைக் காப்பாற்றப்போகிறேன் என்பவன் தன் பொறுப்புகளிலிருந்து தப்பித்துக்கொள்ள காரணம் தேடுபவன். பொறுப்பற்றவன் புகழ் வேண்டும் என்பதற்காக சொல்லும் பொய்தான் உலகைக் காப்பாற்றப்போகிறேன் என்பது.

பாரதி காலத்தில் எழுத்தாளர்களுக்கு வேறு வருமானம் இல்லை. எனவே வழி இல்லை

உண்மை. ஆனால் அவருக்குக் கிடைத்த வேலைகளில் அவர் தங்கவில்லை. தங்கி இருந்தால், குடும்பத்தையும் பார்த்துக்கொண்டு கவிதைகளையும் எழுதி இருக்கலாம்.

அதோடு பெரும்பொழுதுகளை நண்பர்களோடு பேசியே கழித்தார். உடல் வலிமை கொண்ட பாரதி, பொருளீட்டுவதிலும் புத்திசாலியாய் இருந்திருக்க வேண்டும்.

கம்பன்போல் வள்ளுவன்போல் என்று அவர்களைப் புகழ்ந்துவிட்டு, வள்ளுவன் சொன்ன, ”பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை” என்பதை உள்ளேற்றிக்கொள்ளவில்லை!

இதை நான் பாரதியின்மீதுள்ள அக்கறையில்தான் சொல்கிறேன். பாரதியின் மனைவி செல்லாமளின் வானொலி உரையைக் கேளுங்கள், அவர் இறந்த பல காலம் ஆகியும் செல்லம்மாவால் அந்தத் துயரத்தை மறக்க முடியவில்லை.

No comments: