இந்த உலகத்திலேயே எனக்கு மிகவும் பிடித்த பெயர்

இந்த உலகத்திலேயே எனக்கு மிகவும் பிடித்த பெயர் என் பெயர் :)

ஆகவே buhari@gmail.com என்று என் முகவரியை அமைத்துக்கொண்டேன்.

அடுத்து இந்தப் பிரபஞ்சம் என்பது அனைத்தாலும் ஆனது. நஞ்சும் அதில்தான் அமுதமும் அதில்தான். ஆனால் அது அன்பால் நிறைந்திருந்தால் அத்தனை உயிர்களும் இன்பமாய் வாழுமே என்ற ஆதங்க்ம் எனக்கு எப்போதும் உண்டு.

தொய்ந்துபோகும் உயிர்களைத் தூக்கி நிறுத்துவது வெறெதுவும் இல்லை, அன்புதான். அன்பு இருந்தால் அருளும் குணம் இருக்கும். அன்பு இருந்தால் மன்னிக்கும் மாண்பு இருக்கும். அன்பு இருந்தால் கொடுக்கும் மனம் இருக்கும். அன்பு இருந்தால் அகிலமே நமதாகிப்போகும். இப்படியே அனைவருக்கும் அகிலமே அவர்க்ளுடையது என்று ஆகிவிட்டால், வாழ்க்கை எத்தனை இனிமையானது.

இதயம் மீறும் எண்ணங்களால்
நாம் எழுந்து பறப்போமே
இதய நிழலில் இதயம் கிடத்தி
இன்னல் துறப்போமே

இதுதான் நான் அன்புடன் என்ற என் குழுமம் தொடங்கியம் எழுதிய அழைப்பு வரிகள். இதை முன்பே யோசனை செய்துகொண்டு அன்புடனைத் தொடங்கவில்லை. முதன் முதலில் கூகுளிடம் குழுமம் தொடங்க பதிவு செய்தபோது குழுமம் பற்றிய குறிப்பு கேட்டது. குறிப்பா? சரி என்று அப்படியே அப்போதே இந்த வரிகளை எழுதினேன்.

அந்த அன்பு பிரபஞ்சத்தில் இருக்க வேண்டுமானால் நம் ஒவ்வொருவரிடமும் அது நிறைவாய் இருக்க வேண்டும். நம் ஒவ்வொருவரிடமும் அன்பு இருக்க வேண்டும் என்றால் அது என்னிடம் முதலில் இருக்க வேண்டும்.

என்னிடம் இருப்பதை எனக்கே உறுதி செய்வதாய் ஆக்கிக்கொண்டதுதான் என் பெயருடன் இணைத்தது. பலரும் அன்புடன் என்று எழுதி தன் பெயரை அதன் கீழேதான் இடுவார்கள். ஆனால் நான் அன்புடன் புகாரி என்று ஒரே வரியில் எழுதுவேன். ஏனெனில் என் பெயரே அதுதான் என்பதுபோல் இருக்க வேண்டும் என்பதற்காக. ஆகையால் என் எழுத்துலகுக்காகவும் ந்ண்பர்களுக்காகவும் அலுவல் அற்ற பிற விசயங்களுக்காகவும் நான் உருவாக்கிக்கொண்ட் இன்னொரு மின்னஞ்சல்

anbudanBuhari@gmail.com

என் வலைப்பூவும் http://anbudanbuhari.blogspot.com தான்
என் குழுமமும் http://groups.google.com/group/anbudan தான்

3 comments:

சக்தி said...

அன்பின் புகாரி,

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் என்றான் வள்ளுவன். அன்பினாலே ஒரு
தோட்டம் அமைத்து, அன்பையே அதில் நட்டு, அன்பு மிகை கொண்ட அன்பு உள்ளங்களை
அங்கே செடிகளாக்கி அன்பையே அறுவடை செய்யும் உங்களுக்கு பொருத்தமான
மின்னஞ்சல் பெயர்தான்.


>>> இதயம் மீறும் எண்ணங்களால்
நாம் எழுந்து பறப்போமே
இதய நிழலில் இதயம் கிடத்தி
இன்னல் துறப்போமே >>


அன்புடன்
சக்தி

சீனா said...

அன்பின் புகாரி


அருமையான விளக்கம் - ஒவ்வொரு பெயருக்கும் பின்னால் ஒரு கதையே இருக்கும்

அன்பான புகாரி அன்புடன்புகாரி என அழைக்கப்படுவதற்கு நல்வாழ்த்துகள்

ஆயிஷா said...

அன்புடன் ஆசானுக்கு
உங்கள் அன்பு என் கண்களைப் பணிக்கச் செய்து விட்டது. அன்புக்காக அன்பைத் தேடி அலையும் எனக்கு உங்கள் எழுத்துக்கள் ஒரு உந்துகோலாக உள்ளது. மகிழ்கின்றேன் அன்பு நிறைந்த உங்களின் நட்புக் கிடைத்தமைக்கும், உங்களினால் உருவாக்கப்பட்ட குடும்பத்தில் நானும் ஒரு குழந்தையாக பிறந்தமைக்கும்.
அன்புடன் ஆயிஷா