மகளிர்தின வாழ்த்துக்கள்
பெண் இல்லாமல் போனால் இந்த உலமே இல்லாமல் போகும். ஒவ்வொரு உயிரையும் அவள்தான் பெற்றெடுக்கிறாள். அவளன்றி படைப்பில்லை.
ஒவ்வொரு பிள்ளைக்கும் அவள்தான் ஊட்டுகிறாள். அவளன்றி காத்தலில்லை. தாயாய் பாலோடு வந்து ஊட்டியவள் தன்பிள்ளைக்கு என்றென்றும் உணவூட்டவே தவிப்பாள்.
தாயிடம் ஊட்டிக்கொண்ட ஆண் தாரத்திடமும் ஏங்கி நிற்பது இயல்பு. ஒரு பெண்ணுக்கு எறும்பும் தெருமுனை நாயும்கூட பிள்ளைகளே. உணவூட்டி மகிழ்வாள்.
கணவனை மட்டும் சீண்டுவது ஊடல் கொள்ளத்தானேயன்றி காத்தலை உதறித்தள்ள அல்ல.
அத்தனையும் இழந்து ஆண் விதியடியில் வீதிமடியில் கிடக்கும்போது அள்ளி அணைத்து அவனுக்கு உயிரூட்ட ஒரு பெண்ணுக்கே இயலும்.
ஆக்கலும் காத்தலுமே பெண். அழித்தல் என்பது தன்னைத்தான் என்பதால் பெண் இறைவனாலும் புகழப்படுபவள்.

2 comments:
பெண்ணை போற்றுவோம், மதிப்போம்
வாழ்த்துக்கள்
கணவனை மட்டும் சீண்டுவது ஊடல் கொள்ளத்தானேயன்றி காத்தலை உதறித்தள்ள அல்ல.
:) சீண்டுவாளா/.. சீண்டப்படுவாளா..?
அத்தனையும் இழந்து ஆண் விதியடியில் வீதிமடியில் கிடக்கும்போது அள்ளி அணைத்து அவனுக்கு உயிரூட்ட ஒரு பெண்ணுக்கே இயலும்.
ஆனந்த தாண்டவம் படத்தில் தந்தை அப்படி செய்வார்.
ஆக்கலும் காத்தலுமே பெண். அழித்தல் என்பது தன்னைத்தான் என்பதால் பெண் கடவுளினும் மேலானவள்.
இருவருமே..பெண் பாசம் கொடுக்க தெரிந்தவள் என்றாலும் ஆண் அந்த பாசத்தை முழுவதுமாக அனுபவிக்க தெரிந்தவன்..
" ஏண்டா 2 பேரும் எப்ப பார்த்தாலும் அம்மா அம்மானுட்டே இருக்கீங்க.. நானும் கொஞ்ச நேரம் என் மனைவிகிட்ட பேசிக்கிறேனே .." னு நேற்றுதான் சண்டை பிடித்தார் அவர்.. நியாபகம் வந்தது..
பெண் ஊற்று.. அன்பை தேடுபவர்கள் பொறுத்து அவள் அக்ஷய பாத்திரம்..:)
நல்லதொரு பகிர்வு..நன்றி..
--
சாந்தி
தன்னைப்போல் பிறரையும் நேசி..
Post a Comment