யாருக்குமே
எதிரியாய் இருக்க
விழைவதில்லை நான்

அவ்வண்ணமே
எழுதாமலும்
என்னால்
இருக்க இயலுவதில்லை

என்னை
நான் விரித்து எழுதினால்
எங்கிருந்தெல்லாமோ
தோட்டாக்களோடு
நிரம்பி வருகிறார்கள்
நண்பர்கள்

என்ன செய்ய முடியும்
நான்
எழுதிக்கொண்டேதான்
இருப்பேன்

அறம்
எழுத வந்தவனுக்கு
பயம் இருக்கக் கூடாது

தர்மம்
பேச வந்தவனுக்கு
தயக்கம் இருக்கக் கூடாது

ஹலால்
வலியுறுத்த வந்தவனுக்கு
வார்த்தை சுருங்கக் கூடாது

1 comment:

mohamedali jinnah said...

அருமை அண்ணா அருமை
நீங்கள் இன்ஷா அல்லாஹ் அவசியம் எழுதிக் கொண்டே இருங்கள் .உங்களுக்காக மட்டுமல்லாமல் தமிழுக்காக மற்றும் மக்களுக்காக
அன்புடன்