அடிக்கொருதரம் துடிக்குது மனம்


தமிழின் வல்லினம் கசடதபற. காதலின் வல்லினம் அடங்காத மோகம். ஆகவேதான் இந்த தேன்முத்த நிலாக் கவிதை தமிழின் வல்லின எழுத்துக்கள் மிகுந்து காதலின் வல்லினம் இசைத்து அமைந்துவிட்டது. நான் முயலாமல் அதுவே தானாக இயல்பாக.


அடிக்கொருதரம்
துடிக்குது மனம்
படுக்கையை விரி இளமானே
பனிப் படுக்கையை விரி
இளமானே

கொடியது கனம்
ஒடியுது இடை
மடியினில் இடு இளமானே
என் மடியினில் இடு
இளமானே

வெடித்ததும் மலர்
கொடுக்குது தேன்
தடுப்பதும் ஏன் இளமானே
நீ தடுப்பதும் ஏன்
இளமானே

தடுக்கின்ற வெட்கம்
வடிக்குது ரசம்
உடுப்பினை எறி இளமானே
உன் உடுப்பினை எறி
இளமானே

தொடுவது சுகம்
விடுவது ரணம்
முடிவற்ற தொடர் இளமானே
இது முடிவற்ற தொடர்
இளமானே

3 comments:

ஆ.ஞானசேகரன் said...

ம்ம்ம் நல்லா இருக்கு

தஞ்சை மீரான் said...

இசை அமைத்து பாடனும் போல இருக்கு....
இந்த கவிதை வரிகள்.

ஓ மானே மானே மானே உன்னைதானே............(சினிமா பாடல் ஒன்று நினைவுக்கும் வருகிறது)

மானே மானே உன்னைத்தானே.....(இதுவும் ஒரு பாடல்)

விக்ரம் விக்ரம் என்ற பாடல் இடையில் வரும் வரிகள்......

அடிப்பது புஜம்
ஜெயிப்பது நிஜம்
........

என்ற ஓசையை இந்த கவிதை பாடலும் தருகிறது.

ஆயிஷா said...

அன்புடன் ஆசான்......
மெட்டுப் போட்டுப் பாடினால் அழகான பாடல் ஐயா.
நான் அதை அப்படியே திருடிவிட்டேன்.

அன்புடன் ஆயிஷா