கவிதைக்குப் பொய்யழகு


சுனாமியின் வேதனையை ஒரு கவிதையாய்க் கொட்டினால் பாருப்பா, சோகத்தில் ஆதாயம் தேடுகிறான் கவிஞன். இவனுக்கு இப்படிப் பொய்யாய் புலம்பியே பழகிப்போச்சு என்கிறார்கள் அறியாத சிலர். சுனாமியின் தகவல் வந்ததிலிருந்து, கண்கள் கரைபுரண்டோட செய்திகள் கேட்பதிலேயே தவிப்போடு இருந்தேன். சுனாமிக்கு உண்மையான காரணம் என்ன அதை எப்படித் தவிர்க்கமுடியும் என்ற என் சிந்தனை
எங்கெங்கோ சென்றது.

நேற்று முதல் காரியமாக அதிகாலையிலேயே, இந்து நாளிதழ் நிவாரண நிதி மூலமாக நிதியளித்தேன். நேற்று நடு இரவில் என் மனதில் தங்கிய சோகம், சிந்தனை, உணர்வுகளின் அலைக்களிப்பு எல்லாம் கவிதையாய் வெளிவந்து கொட்டின.

ஓவ்வொருவருக்கும், ஒவ்வொரு வடிகால். கவிஞனின் வடிகால் கவிதை. துக்கம் என்பது அழுகையால் மட்டும் வருவதில்லை. கவிதையாலும் வரும். களிப்பில் வருவதுதான் கவிதை என்பது தவறான நினைப்பு. இதுபோன்ற தருணங்களில் வரும் கவிதைகள் வார்த்தை தேடி அலையாது. உணர்வுகளை அப்படியே கொட்டும்.

கவிஞர்கள் உணர்வுகளால் ஆனவர்கள். பிணங்களைத் தின்று புகழ் தேடமாட்டார்கள். கவிஞன் என்பது அரிதார முகம் அல்ல. அது ஒரு மன இயல்பு. கவிஞன் தன்னை மீறிய உணர்வுகளால் ஆளப்படுபவன்,
அதைக் கவிதைகளில் இறக்கிவைக்கிறான். அது மிகை என்றும் கவிதைக்குப் பொய்யழகு என்றும்
கவிதை என்பதே பொய் என்றும் கூறுகிறார்கள் சிலர்.

உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் என்று கூறுவது அறிவியல் கண்ணோட்டத்தில் அழகான பொய்தான், அதீத மிகைதான். நிலாவைப் பிடித்துத் தருகிறேன் ஒரு வாய் சோறு வாங்கிக்கொள் என்று
தாய் அதை நமக்குப் பேச்சுவரும்முன்பே சொல்லிக் கொடுத்துவிடுகிறாள். எனவே, தாய்மைக்குப் பொய்யழகு என்று சொல்லலாமா? அவள் பாசம் என்ற அரிதாரம் இட்டவள் ஆகிறாளா?

உனக்காக என் உயிரைத்தருவேன் என்கிறான் உணர்வு பொங்கும் நண்பன். எனவே, நட்புக்குப் பொய்யழகு என்று சொல்லலாமா? அவன் நட்பு என்ற அரிதாரம் இட்டவன் ஆகிறானா? வானத்து நட்சத்திரங்களை எல்லாம் பிடித்துவந்து தோரணம் கட்டவா என்கிறான் காதலன். எனவே, காதலுக்குப் பொய்யழகு என்று சொல்லலாமா? அவன் காதல் என்ற அரிதாரம் பூசிக்கொள்கிறானா?

இணையத்தால் ஆகாதது ஏதுமில்லை என்கிறான் கணிஞன். எனவே, கணிஞனுக்குப் பொய்யழகு என்று சொல்லலாமா? கணிஞன் பெருமை என்ற அரிதாரம் பூசிக்கொள்கிறானா? இப்படியே போனால்,
வாழ்க்கைக்குப் பொய்யழகு என்று புரிந்துகொள்ள அதிக நேரம் பிடிக்காது.

4 comments:

Colon Hydrotherapy said...

cool pics

ருத்ரா பரமசிவன் said...

அழ‌காய் சொன்னீர்க‌ள் அன்புள்ள‌ புகாரி அவ‌ர்க‌ளே

ஆம்.உண்மை க‌ச‌க்கும்.சுடும் என்று தான் சொல்கிறார்க‌ள்.தேனுக்குள்
ம‌ருந்தை வைத்து ம‌ருத்துவ‌ம் செய்வ‌து தான் க‌விதைத்தொழில்.க‌விஞ‌னின்
பொய் யாரையும் தைத்து துன்புறுத்துவ‌து அல்ல.ந‌த்தைக்கும் பூவால் மெத்தை
தைப்ப‌வ‌ன் அவ‌ன்.அது போகும் முட்பாதையிலும் "கிரீஸ்" போட‌
த‌ன் எதுகை மோனைக‌ளை எப்போதும் த‌யாராய் வைத்திருப்பான்.இந்த‌ பொய்மை
ம‌ய‌க்க‌த்தை அருமையாக‌ விள‌க்கிவிட்டீர்க‌ள்.ஒரு சின்ன‌ க‌ட்டுரைகூட‌
உங்க‌ளுக்கு க‌விதையெனும் அல்வாத்துண்டாக‌த்தான் விழுகிற‌து.(இது
க‌ண்டிப்பாக‌ திருநெல்வேலி அல்வா அல்ல‌)
பாராட்டுக‌ளுட‌ன்
அன்புள்ள‌ ருத்ரா

பூங்குழலி said...

>>>>சுனாமியின் வேதனையை ஒரு கவிதையாய்க் கொட்டினால் பாருப்பா, சோகத்தில் ஆதாயம் தேடுகிறான் கவிஞன். இவனுக்கு இப்படிப் பொய்யாய் புலம்பியே பழகிப்போச்சு என்கிறார்கள் அறியாத சிலர். <<<<

இப்படியும் சிலர் இருக்கத் தான் செய்கிறார்கள் .இது போன்ற சந்தர்ப்பவாத எழுத்துகளுக்கு சில நேரம் அங்கீகாரம் எளிதில் கிட்டுகிறது .


>>>>சுனாமியின் தகவல் வந்ததிலிருந்து, கண்கள் கரைபுரண்டோட செய்திகள் கேட்பதிலேயே தவிப்போடு இருந்தேன். சுனாமிக்கு உண்மையான காரணம் என்ன அதை எப்படித் தவிர்க்கமுடியும் என்ற என் சிந்தனை
எங்கெங்கோ சென்றது.<<<<


முன்பு ரிஷான் எழுதிய ஒரு கட்டுரை நினைவுக்கு வருகிறது புகாரி .சுனாமியைப் பற்றிய அதில் ,"சிலர் அதைப் பற்றி கவிதை எழுதினார்கள் ,அது சுனாமியை விடவும் துன்பமாக இருந்தது "(சரியாக நினைவில்லை )என்று எழுதியிருந்தார் .

>>>>நேற்று முதல் காரியமாக அதிகாலையிலேயே, இந்து நாளிதழ் நிவாரண நிதி மூலமாக நிதியளித்தேன். நேற்று நடு இரவில் என் மனதில் தங்கிய சோகம், சிந்தனை, உணர்வுகளின் அலைக்களிப்பு எல்லாம் கவிதையாய் வெளிவந்து கொட்டின.

ஓவ்வொருவருக்கும், ஒவ்வொரு வடிகால். கவிஞனின் வடிகால் கவிதை.
உண்மை
துக்கம் என்பது அழுகையால் மட்டும் வருவதில்லை. கவிதையாலும் வரும். களிப்பில் வருவதுதான் கவிதை என்பது தவறான நினைப்பு. இதுபோன்ற தருணங்களில் வரும் கவிதைகள் வார்த்தை தேடி அலையாது. உணர்வுகளை அப்படியே கொட்டும்.

கவிஞர்கள் உணர்வுகளால் ஆனவர்கள். பிணங்களைத் தின்று புகழ் தேடமாட்டார்கள். கவிஞன் என்பது அரிதார முகம் அல்ல. அது ஒரு மன இயல்பு.
சரிதான் .ஆனால் அரிதாரம் பூசிக் கொள்ள தெரிந்தவர்கள் சிலரும் இருக்கிறார்கள் .
கவிஞன் தன்னை மீறிய உணர்வுகளால் ஆளப்படுபவன், அதைக் கவிதைகளில் இறக்கிவைக்கிறான். அது மிகை என்றும் கவிதைக்குப் பொய்யழகு என்றும் கவிதை என்பதே பொய் என்றும் கூறுகிறார்கள் சிலர்.

உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் என்று கூறுவது அறிவியல் கண்ணோட்டத்தில் அழகான பொய்தான், அதீத மிகைதான். நிலாவைப் பிடித்துத் தருகிறேன் ஒரு வாய் சோறு வாங்கிக்கொள் என்று
தாய் அதை நமக்குப் பேச்சுவரும்முன்பே சொல்லிக் கொடுத்துவிடுகிறாள். எனவே, தாய்மைக்குப் பொய்யழகு என்று சொல்லலாமா? அவள் பாசம் என்ற அரிதாரம் இட்டவள் ஆகிறாளா?

உனக்காக என் உயிரைத்தருவேன் என்கிறான் உணர்வு பொங்கும் நண்பன். எனவே, நட்புக்குப் பொய்யழகு என்று சொல்லலாமா? அவன் நட்பு என்ற அரிதாரம் இட்டவன் ஆகிறானா? வானத்து நட்சத்திரங்களை எல்லாம் பிடித்துவந்து தோரணம் கட்டவா என்கிறான் காதலன். எனவே, காதலுக்குப் பொய்யழகு என்று சொல்லலாமா? அவன் காதல் என்ற அரிதாரம் பூசிக்கொள்கிறானா?

இணையத்தால் ஆகாதது ஏதுமில்லை என்கிறான் கணிஞன். எனவே, கணிஞனுக்குப் பொய்யழகு என்று சொல்லலாமா? கணிஞன் பெருமை என்ற அரிதாரம் பூசிக்கொள்கிறானா? இப்படியே போனால், வாழ்க்கைக்குப் பொய்யழகு என்று புரிந்துகொள்ள அதிக நேரம் பிடிக்காது.<<<<<


விரிவான அலசல் .அழகான எடுத்துக்காட்டுகளுடன்

துரை said...

கவிஞனை அழகுபடுத்திய ஆசானுக்கு வாழ்த்துகளும்,நன்றிகளும்

( இதுல வேறுமாதிரியும் அர்த்தம் வருதோ )