ஊடகம் கேடகம்

கேடுகளால் அழிந்துபோன
கால்வாசி நாசத்தை

திருப்பத் திரும்ப
சொல்நயத் திறமைகூட்டி

மாறி மாறி
நுண்கலை வலுசேர்த்து

மீண்டும் மீண்டும்
அதிரடிக் காட்சிகளோடு

இடை இடையே
நாச அனுமானங்களோடு

ஒலி ஒளி பரப்பிய
இருபத்தியோராம் நூற்றாண்டின்
ஊடகவியல்

அழித்தெடுத்தது
மீதம் முக்கால்வாசி
தேசத்தையும்

ஊடகமில்லாக் காலங்களில்
உயிரழிவுகளும்
அறியாதிருந்ததென்னவோ
உண்மைதான்
ஆனால்
ஊடகங்கள் வந்ததும்
காலமே அழிந்து
சொட்டுச் சொட்டாய் வழிகிறதே

3 comments:

cheena (சீனா) said...

ஆம் உண்மை, ஊடகங்களினால் விளையும் தீமைகள் நன்மைகளை விட அதிகமாகத் தோன்றுகிறது சில சமயங்களில். என்ன செய்வது. ஊடகங்கள் சற்றே பொறுப்புடன் நடந்து கொண்டால் நலமாயிருக்கும்.

பூங்குழலி said...

நியாயமான கோபம் தான் .ஆனால் நமக்கு வேண்டியதை நாம் தானே தெரிந்தெடுத்துப் பார்க்கிறோம்

சாந்தி said...

நிஜம்...:((