ஒரு கவிஞனின் முகவரி



கட்டிவைத்தக்
கரையில்லா வெள்ளம்

எந்நாளும் நீரோடும்
உயிர் நதி

காலவாய்க் கொட்டுகளுக்குக்
கட்டுப்படாத தேனீ

வெட்டிப்பேச்சு விரும்பாத
வேங்கை

எதற்கும்
வெட்கமின்றி ஒளிவதில்லை
கருத்தோடு நெருப்பெரியும்
காட்டுத்தீ

விழி பார்த்து
உள்மொழி காணும் தேடல்

தூற்றி
வெறுப்போர்க்கும்
விளக்கம் நெய்யும் தறி

ரசனையெனும்
அமுதக்கடலில் மிதப்பு
அதில் துடிப்புகளின்
துடுப்புகளாய் அலைவு

பொய்கேட்டுத்
தீயாகும் ரத்தம்

விரோதிக்கும் அன்பளித்து
வாக்களிக்கும் நெஞ்சம்

கவிஞன்

*

என்னைப்பற்றித்தான் நான் எனக்குள் கண்டதை எழுதினேன் இப்படி பாரதியைப் போல. ஆனால் இறுதியில் கவிஞன் என்று முடித்தேன். இந்த குணங்களை அனைத்துக் கவிஞர்களுக்குமானதாக ஈந்தேன். ஏனெனில் சுயம்பாட நாணம் கொள்வதும் என் அடையாளங்களுள் ஒன்று ;-)

7 comments:

மயூ மனோ (Mayoo Mano) said...

அது தான் கவிஞன்.....

சாந்தி said...

தூற்றி வெறுப்போர்க்கும்
விளக்கம் நெய்யும் தறி




விரோதிக்கும் அன்பளித்து
வாக்களிக்கும் நெஞ்சம்



அருமை இவ்விரு வரிகளும்..

சிவா said...

எதற்கும்
வெட்கமின்றி ஒளிவதில்லை
கருத்தோடு நெருப்பெரியும்
காட்டுத்தீ

விழி பார்த்து
உள்மொழி காணும் தேடல்


கலக்கல் :)

பிரசாத் said...

> ரசனையெனும்
> அமுதக்கடலில் மிதப்பு
> அதில் துடிப்புகளின்
> துடுப்புகளாய் அலைவு


இவ்வரிகள் மிகவும் அருமை...

பூங்குழலி said...

எந்நாளும் நீரோடும்
உயிர் நதி

அருமை

புன்னகையரசன் said...

காலவாய்க் கொட்டுகளுக்குக்
கட்டுப்படாத தேனீ

வெட்டிப்பேச்சு விரும்பாத
வேங்கை


அருமை


பொய்கேட்டுத்
தீயாகும் ரத்தம்

விரோதிக்கும் அன்பளித்து
வாக்களிக்கும் நெஞ்சம்


மிக அருமை..

விஷ்ணு said...

நல்ல கவிதை ஆசானே .. கவிதையின் ஒவ்வொரு வரிகளும் கலக்கல் ...

அன்புடன்
விஷ்ணு ..