நால்வகை மனிதன்

மனிதர்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம்!

1. பிறப்பிலேயே தவறுசெய்யாமல் வாழ்வார்கள். தவறிப்போய் ஏதேனும் தவறு செய்துவிட்டால், அதற்காக வருந்தி வருந்தியே பிறகொரு தவறும் செய்யாமல் வாழ்வார்கள்

இது மனிதத்தின் வெற்றி

2. மதங்கள் சொல்வதை அப்படியே கேட்டு மாறாமல் நடப்பார்கள். கடவுளுக்குப் பயந்து எந்தப் பாவமும் செய்யமாட்டார்கள்.

இது மதத்தின் வெற்றி

(ஒரே ஒரு மதம் மட்டும் ஒரு நாட்டில் இருந்தபோது, பிரச்சினைகள் குறைவாக இருந்திருக்கலாம். ஆனால் அது இனி சாத்தியமில்லை. ஒரே இடத்தில் ஒன்றுக்குமேற்பட்ட
மதங்கள் வந்து சர்ச்சைகள் கிழம்பி சண்டைகள் வலுத்து நாசமாகிவிட்டன. இன்று உலகம் என்பது சுருங்கி ஒரே இடமாகிவிட்டது இதனால் மதம் மூலமாக உருவாகும் வெற்றியைவிட தோல்விகள் அதிகமாகிவிட்டன.)

3. நல்ல மனதுடன் பிறந்திருக்கமாட்டார்கள். மதம் சொல்வதையும் கேட்க மாட்டார்கள். சட்டத்தால் கண்காணித்து ஒடுக்கினால்தான் அடங்குவார்கள்.

இது சட்ட ஒழுங்கின் வெற்றி

4. நல்ல மனமும் கிடையாது, மதம் சொல்வதையும் கேட்கமாட்டார்கள், சட்டத்துக்கும் பயப்படமாட்டார்கள், எப்படி சட்டத்தைச் சாதுர்யமாய் மீறலாம் என்பதிலேயே கவனமாய் இருப்பார்கள். இவர்களை ஒன்றுமே செய்யமுடியாது.

இது மனித இனத்திற்கே தோல்வி

ஆனால் இந்தத் தோல்வியின் அளவு ஒரே ஒரு சதவிகிதம்தான். மனிதத்தின் வெற்றி சுமார் 60 சதவிகிதம் மதத்தின் வெற்றி சுமார் 10 சதவிகிதம் சட்ட ஒழுங்கின் வெற்றி சுமார் 29 சதவிகிதம் மனித இனத்தின் தோல்வி சுமார் 1 சதவிகிதம் என்று ஒரு அனுமானம் கொள்வோம். ஆனால் ஒரு சதவிகித தோல்வி என்பதே நம் உலகிற்கு மிகப்பெரிய நாசம்தான்.

ஜூலை 2007 உலக மக்கள் தொகை: 6,602,224,175 (6.6 பில்லியன்) இதில் ஒரு சதவிகிதம் என்பது 66,022,242 (66 மில்லியன் - 6.6 கோடி)

உலகில் இந்த 66 மில்லியன் மக்கள் தவறு செய்தால் அதனால் வெகு எளிதாக அழிவது 6.6 பில்லியன் மக்கள். பாலைவிட விசத்திற்கு வீரியம் அதிகம்தானே?

ஆகவே இந்த ஒரு சதவிகித மக்கள் செய்யும் தவறுகளையும் சரிசெய்தே ஆகவேண்டும். அதற்குச் சரியான வழி குற்றங்களுக்கு ஏற்ப கடுமையான சட்டங்களும், அதைவிட அந்தச் சட்டங்களை 100 சதவிகிதம் நடைமுறைப்படுத்துவதும்தான்.

5 comments:

சக்தி said...

அன்புடன் நண்பரே புகாரி,

கவிதைகள் மட்டுமல்ல நீங்கள் வரையும் கட்டுரைகளுமே நிகரற்றவகையாகத்
திகழ்கின்றன.

அன்புடன்
சக்தி

சீனா said...

கருத்தும் கட்டுரைக்கோப்பும் நன்று நன்று

நல்வாழ்த்துகள் புகாரி

சாந்தி said...

ஆகவே இந்த ஒரு சதவிகித மக்கள் செய்யும் தவறுகளையும் சரிசெய்தே ஆகவேண்டும். அதற்குச் சரியான வழி குற்றங்களுக்கு ஏற்ப கடுமையான சட்டங்களும், அதைவிட அந்தச் சட்டங்களை 100 சதவிகிதம் நடைமுறைப்படுத்துவதும்தான்.


ஒருபோதும் இது பலனளிக்காது என்பது என் எண்ணம்... 4வது வகையினர் எப்போதும் 1 அல்லது 2 வது வகையினரை அருகில் வைத்திருப்பர்..:)

கள்ளன் பெரிதா காப்பான் பெரிதா?

செல்வன் said...

1. பிறப்பிலேயே தவறுசெய்யாமல் வாழ்வார்கள். தவறிப்போய் ஏதேனும் தவறு செய்துவிட்டால், அதற்காக வருந்தி வருந்தியே பிறகொரு தவறும் செய்யாமல் வாழ்வார்கள்


மகான்கள்


2. மதங்கள் சொல்வதை அப்படியே கேட்டு மாறாமல் நடப்பார்கள். கடவுளுக்குப் பயந்து எந்தப் பாவமும் செய்யமாட்டார்கள்.


மதத்தில் நல்லதும் இருக்கு.கெட்டதும் இருக்கு.எந்த மதமும் சொல்வதை அப்படியே முழுக்க உள்வாங்கி செயல்படுபவன் முழுவெறியனாக தான் இருப்பான்.இவனால் இவன் மதத்தவர்களுக்கே பிரச்சனை வரும்.பிறமதத்தவர்களை பற்றி கேட்கவேண்டுமா?

மத்த இரண்டும் ஓக்கே.

சாதிக் அலி said...

புஹாரி சார்,


அருமையான கட்டுரை. இறுதியில் உள்ள ஆணித்தரமான தீர்வு. வாழ்த்துகிறேன் உங்களை. தொடர்ந்து தருக..................காத்திறுக்கிறோம்.




------------அன்புடன் சாதிக் அலி, ஜித்தா.