2 அறத்துப்பால் - பாயிரவியல் - வான் சிறப்பு


வான மழை மண்ணில்
வீழாது போனால்
வாழும் மனிதர்களோ
எங்குமில்லை

உணவளிக்க
உறுதுணை நிற்பதும்
நீராகவே
உட்கொள்ளும் உயிருக்கு
உடனடி
உணவாகிப் போவதும்
மழையே

முழுவதும் கடல் நீரே
சூழ்ந்திருந்தபோதும்
மழையற்றுப் போனால் மக்கள்
மாண்டுதான் போவர்

உழுது வாழும்
உழவர்ககளும் உழவிழப்பர்

பெய்யாது ஓய்ந்து
கொன்றுபோடுவதும்
அன்னமாய்ப் பொழிந்து
அழியும் மக்களை
அரவணைப்பதும்
அந்த வான மழைதான்

மழையின்றி பூமியில்
புற்களின் தலைகளும்
புறப்படாது

ஆழ்கடலும் கூட
அடிவற்றியே போகும்

விண்ணுலகத்தார்க்கு
எடுக்கப்படும்
விழாக்களும் வைபவங்களும்
விடுபட்டுப் போகும்

பிறர் வாழ
வாரி வழங்கும் தானங்களும்
தாம் வாழத்
தொடுக்கின்ற நோன்புகளும்
தடம்மாறிப் போகும்

பண்பால் உயர்ந்தோரும் கூட
தம்
நற்குணங்கள் கெட்டே
அழிவர்


வானின் றுலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை

விணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி

ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்
வாரி வளங்குன்றிக் கால்

கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு

தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்

நீர்இன்று அமையாது உலகுஎனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு

No comments: