தமிழை Tamil என்று எழுதுவது
நடைமுறைக்கு வந்துவிட்ட
ஒரு பழக்கம்.
இருப்பினும் Tamil(டமில்) என்று
வாசிக்கும்போதெல்லாம்,
தமிழ் தூரமாய் நின்று
சிரிப்பது போலவே இருக்கிறது.
சிறப்பு 'ழ'கரம் தமிழின் தனித்துவம்,
அதனை ஆங்கிலத்தில் கொண்டுவர இயலாமை
நமக்கெல்லாம் பெரும் துயரம்.
Tamil என்று எங்கும் எழுதப்படுவதால்,
'டாமில்' என்று வாசிக்கும்
வேற்றுமொழிக்காரர்களையவது
பொறுத்துக்கொள்ளலாம்,
புரிய வைக்கலாம்.
ஆனால் நுனிநாக்கில்
'டாமில்' பேசிவரும் 'கான்வெண்ட்' (மடம்?)
இளசுகளை என்ன செய்வது.
எனவே Tamil-ஐ மாற்றலாமே
என்று தோன்றுகிறது எனக்கு.
எப்படி?
THAMIZH - என்பது
தமிழறிந்த அனைவராலும்
சரியாகவே உச்சரிக்கப்படும் வார்த்தை.
ஆனால் தமிழறியாதவர் எப்படி உச்சாரிப்பார்.
'தமிஸ்' அல்லது 'தமிஷ்' என்றுதானே?
THAMIL - என்று சிலர் எழுதப் பார்த்திருக்கிறேன்.
Tamil என்பதைவிட இது சுகமாகவே இருக்கிறது.
அதாவது 'டாமில்' ஒளிந்து இப்போது
'தமில்' வந்துவிடும்.
உறுத்தலின்
ஒருபாதியேனும் அழியும்.
இதில் மனம் நிறையவில்லை
என்றபோதும்
டமில், டாமில் இரண்டும் ஒழியுமே
No comments:
Post a Comment