கவிதைகளால் அளந்துபார்


கவிதைகளால்
முகர்ந்துபார்
உலகம் பூப்போலே

கவிதைகளால்
உறங்கிப்பார்
கனவும் நிஜம்போலே

கவிதைகளால்
தொட்டுப்பார்
பரிசம் சொர்க்கத்திலே

கவிதைகளால்
வளைத்துப்பார்
இதயம் முயல்போலே

கவிதைகளால்
தேடிப்பார்
வாழ்க்கை கைக்குள்ளே

கவிதைகளால்
திறந்துபார்
கதவும் காற்றாலே

கவிதைகளால்
வைதுபார்
பகையும் நிலையாதே

கவிதைகளால்
நிமிர்ந்துபார்
வானம் சிறுதுகளே

கவிதைகளால்
அளந்துபார்
காலம் குறுகியதே

Comments

//கவிதைகளால்
வைதுபார்
பகையும் நிலையாதே//

வாவ்.. கலக்கிட்டீங்க புகாரி.

//கவிதைகளால்
அளந்துபார்
காலம் குறுகியதே//

நல்ல முடிவு.
Prabu said…
அன்புள்ள திரு.புகாரி,

தங்கள் கவிதைகளான வளைகுடா, அறுவடை, மருதாணி, பைசா கோபுரம், யாரோ ஒருவன்.., தொலைபேசி, என் குரல்...., மின்னஞ்சல் ஓசை பாடல் ம்ற்றும் அனைத்தும் மிக மிக அருமை. பாராட்ட வார்த்தைகளில்லை.

வார்த்தைகளிலும், கருத்துக்களிலும் விளையாடியிருக்கிறீர்கள்.அற்புதம்.

-த.பிரபுகுமரன்.
அருமைக் கவிதை. கவிதைகளால் என்ன வெல்லாம் செய்ய முடியும் என்று அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள் - வாழ்த்துகள்

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சென்னை விழா நன்றியுரை

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

காணி நிலம் வேண்டும் பராசக்தி

கண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ