தெய்வீக ராகம்


தெய்வீக ராகம்
தெருக்குப்பை மேட்டில்

தெளிவான பாடல்
கேட்பாரோ இல்லை

எறிந்தவர் நெஞ்சில்
தவறொன்றும் இல்லை

ஏன் இந்த ராகம் - அவர்
எச்சிலில் கரைந்தது

தெய்வீக ராகம்
தெருக்குப்பை மேட்டில்
கிடந்தால்தான் என்ன
அது தெய்வீக ராகம்

தெய்வத்தின் செவிகள்
எப்போதும் உண்டு
எப்போதும் இருந்தால்
அதன் அருமைக்கு இழுக்கு

இப்போது வந்து
எடுத்தள்ளி அணைத்து
தெய்வீக ராகம்
மனக் கண்ணீரில் கழுவ

தெய்வீக ராகம்
தெளிவான பாடல்
தெய்வத்தின் மடியில்
ஆராரோ ஆரிரரோ

Comments

தெய்வீக ராகம் தெருக்குப்பை மேட்டில். எறிபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. கலாச்சார மாற்றம். தேவைக்கு மேல் பணப் புழக்கம். ஊடகங்களின் ஊடுறுவல்கள். இணையத்தின் இம்சை. இத்தனையும் தான் காரணம் தெருபக்குப்பை மேட்டுத் தெய்வீக ராகங்களுக்கு. கவிஞனின் ஆதங்கம் புரிகிறது.

//தெருக்குப்பை மேட்டில்
கிடந்தால்தான் என்ன
அது தெய்வீக ராகம் தான்//

உண்மை உண்மை. பாராட்டுகள்

Popular posts from this blog

பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

சென்னை விழா நன்றியுரை

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே