உலகமுதல் இணையநூல் வெளியீடு 14


டாக்டர் ராசரங்கன் தமிழ்நாடு
டாக்டர் ராஜரங்கன் அவர்களிடமிருந்து வந்த வாழ்த்தை நான் இப்போது வாசிக்கிறேன்.:-

மனம் கனிந்த வாழ்த்துகள்! அரிய கவிதைகளை உயரிய முறையில் பொருத்தமான படங்களுடன்

தொகுத்து புது முயற்சியாக

இணையத்தில் வெளியிடுவது பாராட்டுக்குரியது. உங்கள் கவிதைகளை என்றுமே ரசிக்கும் குழுவில்

நான் உண்டு. குறிப்பாக

'தமிழ்' என்ற முதல் கவிதையே ஒரு புதிய உத்தியை அறிமுகப்படுத்துவதை ரசி

த்தேன். அந்தாதி படித்ததுண்டு. ஒரே பாடலின்

முதலடி ஈற்றடியாக வருவது ' ஒரு பாடல் அந்தாதி ' என்று அழைக்கப்படலாமோ? மற்றக் கவி

தைகள் ஒவ்வொன்றும் மனித

மனத்தின் பல பரிமாணங்களைத் தொட்டுப் பார்க்கின்றன. யுத்தம் பற்றி, கண்ணதாசன் பற்றி,

நட்பு பற்றி, கவிதை ரசனை பற்றி,

காதல் பற்றி, எத்தனை எத்தனை எழுதிக் குவித்திருக்கிறீர்கள்! உங்கள் உற்சாகம்

தொடரட்டும். மேலும் மேலும் எழுதிக் குவியுங்கள்.

அன்புடன்
ராஜரங்கன், தமிழ்நாடு

எழுத்தாளர் துபாய் ஆசீப் மீரான்
அன்பின் நண்பர்களே,
பெரிய பந்தல் போட்டு அமர்க்களமா விழா நடக்குது. பெரிய பெரிய ஆட்களெல்லாம் வந்து
வாழ்த்து சொல்லிட்டு இருக்காங்க.

ஆளாளுக்கு வாழ்த்து சொல்லி அசத்துறாங்க. தொண்டர்படை வேற சாப்பாடு போட்டே
ஆளைக் கொன்னுடுவாங்க போலிருக்கு.

தலையிருக்கும்போது வாலாடக் கூடாதுன்னு சொல்லுவாங்க. பெரிய பெரிய தலைங்க
எல்லாம் புகாரி அண்ணனை வாழ்த்தும்போது எங்க ஆசான் திருவோட சேர்ந்து நானும் ஒரு
ஓரமா நின்னு கைதட்டிக்கிட்டு இருக்கேன். எப்பவாவது உணர்ச்சிவசப்பட்டு
விசிலடிச்சிட்டேன்னா முதுகுல ரெண்டு போட்டுடாதீங்க.

ஓரமாக நின்றாலும் ஒதுங்கி விடாத
ஆசிப் மீரான், துபாய்

அன்புடன் இதயம் - ஒரு பருந்துப் பார்வை (யோகியார் வேதம்)
திண்ணையும், எழில்நிலாவும், தமிழ் உலகமும், அகத்தியர் இணையமும் இன்னும் பிற தமிழ் ஏடுகளும் அச்சு முத்தம் கொடுத்து ஆதரித்த, இல்லை, அன்புடன் அரவணைத்துக்கொண்ட என் அன்பர் 'புகாரி'யின் 'அன்புடன் இதயம்' கவிநூலை வரிவிடாமல் படித்து மகிழ்ந்தேன்.

ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவை. தேனில் எப்பழம்போட்டால் என்ன? இனிப்பும், உடலுக்குக் குணமும் தரும் அதுபோல் புகாரியின் வரிகள் யாவுமே மனத்திற்கு இனிமை கூடிப் பரவுகிற பரவசமும், சமுதாயத்திற்கும், நாம் சார்ந்த தமிழ் அன்னைக்கு ஒரு புது ஒட்டியாணமும் அணிவித்த மகிழ்ச்சியும் அவரது அனைத்துப் பாடலிலும் கிடைக்கக் கண்டேன். தமிழையே அவர்

'வைரத்துள்
ஒளிர்கின்ற
கவிதை'


என்றல்லவோ சொல்கின்றார்.

நல்ல புனிதத்துள் நிமிர்கின்ற தீபத்தமிழை, அதனுள்போய் 'இளமை' கலந்த சொற்களாகத் தன் பாட்டுப்பந்தலை வேய்கின்றார். 2-வது கவியில் அவர்

'நீயே
வலிய வந்து
இழுத்த தேரை
ஏன்
திராவகத் தீயில்
செலுத்தினாய்?'


என அவர் காதல் இழந்த ஒருகவிப்பறவையை நம் கண்முன் நிறுத்தும்போது இரு கண்மாய்களும் துக்க நீர் சுமக்கின்றன.

நல்ல பதப்ரயோகம், புதிய சிந்தனை அவரின் சோகப் பாட்டில் கிட்டுகிறது.

அதுபோல் 'கலவரத்தில் உன் வாழ்வைக் கழிக்காதே' என அவர் இக்கால இளைஞனுக்குச் சொல்லும்புத்திமதியில் நல்ல அறிவுரை மட்டுமன்று, அவன் நன்மையே செய்து இச்சமுதாயத்தில் ஒரு சிறந்த வீரனாக வாழவேண்டுமே எனும் கவலையும் தெரிகிறது.

அரிவாள்கள்
அறிவில்லாதவனுக்கே
வேண்டும்;'

பொருளாதார மேன்மை,
மனோதிடச் செல்வம்,
பேரறிவுப் பெரு நெருப்பு
போன்ற
கேடயங்கள் அல்லவோ
இளைஞனே
உனக்கு இன்று வேண்டும்!


என்னும் போது அவரது யதார்த்த ஆதங்கம் புரிகிறது.

மூட வெறிக்கு
முக்கியத்வம் தராதே


என ஆணையிடுகிறார். ஆகவே, இளைஞர்கள் கட்டாயம் இக்கவிதையை நெட்டுருச் செய்தல் அவசியம்,.பல ஏடுகளும் இக்கவிதையைப் பிரசுரித்து அவர்களை நல் வழிக்குத் திசை திருப்ப வேண்டும் என்பது என் ஆசை.

கனடா-வாங்கூவர் ஒருவசந்த தேவதை, ஒரு சொர்க்கம் என்று வரி அழகுகளால் மயில்போல் தோகை விரித்திருக்கிறார். காண வேண்டும் என்ற துடிப்பை என்னுள் விதைத்துவிட்டார்.

வேலை கிட்டவில்லை, பணம் கிடைக்கவில்லை என்று வெற்றுச்சோகத்தில் ஆழ்கிற இக்க்கால இளைஞனை

'சோர்ந்துவிடாதே நீ,
நம்பிக்கை நெருப்பே
கண்களின்
வெற்றியின் சிரிப்பு;
கவலைகளின் வேர்களை
அறுத்து, தோழா!
கண்களின் அருவியைநிறுத்து!


என அவர் அவனை நிமிரத்தூண்டுகிறார்.

நல்ல தெம்புதரும் படைப்பு இது.

'சலவை செய்து
உன் அழுக்கைப் போக்கிவிடு;
சகலரும் வாழ
பூமியைப் பூக்கவிடு;


என்று மிக அற்புத வசந்த வரிகளால் (இவை பொன்னெழுத்துக்களால் எந்த சலவைக்கல்லிலும் பொறிக்கப்படவேண்டியவை) போரை உடனேநிறுத்த அனைத்துத் தேசங்களுக்கும் உத்தரவிடுகிற அழகே அழகு;

அடுத்து 'பஞ்ச பூதங்கள் பற்றியும் ஒவ்வொரு கவியாக பலத்த ஆய்வுக் கண்ணோட்டத்துடன் விடுக்கிற சொற்கள் அனைத்தும் அழகோ அழகு; குறிப்பாக'காற்று'-- கவியில்

காற்றில்மிதக்கும்
வாசனைதானே
சமையல் கலையைக்
கற்றுத்தந்தது;

நித்தமும் நாசிகள்
தொட்டு
கீதம் பாடுவதே
காற்றுதானே?


எனக் கேட்கும்போது 'உண்மையின் பரவசம் நம்மை நிமிரச் செய்கிறது;

இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்; சிந்திய தேனில் எத்துளி இனிப்புத்துளி எனக்கேட்பதுபோல் இருக்குமது.

நல்ல தமிழ் பேச மாட்டேன் என்கிறாயே..தமிழனே! என அவர் ஆதங்கப் படும்போதும் (பக்கம்86,87) தமிழ் இணையம் பற்றி ஆச்சர்யக் கவிவரிகளால் அலங்கரிக்கும்போதும், கண்ணதாசனை (நான் வழிபடும் ஒரு முக்கிய கவி அவர்)

அகோர ராகத்திற்கும்
அழகிய கவிபடைக்கும்
கவித்தலைவன்


எனக்கொண்டாடும்போதும் புகாரி எங்கோ ஒரு கவி-ஆநந்தச் சிகரத்தில் நிற்பதாகப் படுகிறது எனக்கு.

இப்படி வார்த்தைச் சந்தனத்தால் பூசி, வாசிக்கின்ற அனைத்து நல்ல தமிழரையும் மேனி புளகிக்கச்செய்யும் கவி புகாரி எனக்கு அந்நூலில் (ரொம்ப யதார்த்தம்) மிகப் பிடித்த 'என் குடும்பம்' (இதுவே இன்றைய தமிழ் நாட்டின் அவல நிலை)

கவியையும் தமிழுக்குத் தந்ததால் இவரை யான் என் இணையக் கரங்களால் 'சிந்தனைச் செல்வன் புகாரி' எனப் பட்டம அளித்து பாராட்டி மகிழ்கிறேன்.

அன்புடன் வாழ்த்துகிறேன்.
(கவி யோகியார்)

கவிஞர் உயிரெழுத்து கற்பகம்
தமிழுக்கும், தமிழ் உலகத்தின் கவி பிரம்மாக்களுக்கும் வணக்கம். அன்புக் கவிஞருக்கு வந்து சேர்ந்த வாழ்த்துக்களையும், பூமாலைகளையும், பரிசுகளையும். பொற்காசுகளையும், பண முடிச்சுகளையும் பத்திரமாகப் பாதுகாக்கும் பணியினைச் செவ்வெனே மேடையின் ஓரத்தில் நின்று செய்துவந்தேன். வாழ்த்துரைகள் வந்து சேர்ந்துவிட்டன தங்காய்.. வந்து வாசித்துக் காட்டு என்று அண்ணன் ஆல்பர்ட் அழைக்க, இதோ... உங்கள் முன்னிலையில் வாழ்த்துப்பாட வணக்கத்துடன் கற்பகம். இருந்தாலும் என் சிந்தனையின் கவனம் சந்தக் கவிஞருக்காக குவிந்த கெளரவப் பரிசுகளை பாதுகாத்துக் கொண்டுதான் இருக்கிறது.

அமெரிக்க மண்ணில் பட்டுச்செலை அணிந்து, மல்லிகைச் சரங்கள் சூடி, தங்க வளை பூட்டி, அலங்காரம் செய்துகொள்ள ஒரு சந்தர்ப்பம் அமைந்ததே மாபெரும் அதிர்ஷ்டம். கூடுதலாக மேடையில் பேசும் வாய்ப்பினையும் அளித்த தமிழுலக மட்டுனர்களுக்கு எப்படி நன்றி சொல்வது. மிக்க நன்றி. இது போன்ற வெற்றி விழா கண்டதில்லை. வாழ்க உங்கள் தமிழ்த் தொண்டு.

அன்புக் கவிஞர் புகாரி அவர்களை "நிலாவிலும் கற்கள்" என்ற அற்புதமான வலைத்தளத்தின் வாயிலாக சந்தித்த நாள் என்றும் என் வாழ்வில் புனிதமானது. அவரது "அன்புடன் இதயம்" கவிதைத் தொகுதி சென்னையிலிருந்து தபாலில் வந்து என் கைகளில் விழுந்த ஒரு அமுதப்பிரசாதம். அந்த நாளையும் மறக்க முடியாது.

இவரது கவிதைகளை (சு)வாசிக்கும்போது, இந்த கவிஞருக்குள் ஒரே ஒரு இதயம்தான் இருக்கின்றதா என்று எனக்கு சந்தேகம் எழுவதுண்டு. இத்தனை அன்பைத் தளும்பத் தளும்ப அள்ளித் தந்துவிட ஓரு இதயம் அல்ல, அணுக்களிலெல்லாம் இதயம் கொண்டுள்ளார் இவர் என்றே எண்ணத் தோன்றும் எனக்கு. இந்த அறிய கவிக்கு என் சிறிய சமர்ப்பனம்.

கவிதேவன் காலணி

படைத்தவனுக்கும்
பார்ப்பவனுக்கும்
இடைப்பட்ட ஜாதி நீ!

புத்தரல்லாத பாமரனுக்கும்
புத்தி கூறும் போதி நீ!

·
அழுக்கைக் கண்டு, வழுக்கிச் செல்லாமல்
கழுவிச்செல்வாய் செம்மலரே!
களைகள் கண்டு விலகிச் செல்லாமல்
களைந்து விடுவாய் வெண்மலரே.

சோறு உண்ணும்போதெல்லாம்
உழவனை எண்ணும் உன்னத மனம்.
உழைப்பவனுக்கு உற்றது கோரி
குரலெழுப்பும் புண்ணிய குணம்!

பூக்களுக்கு வலிக்காமல்
எட்ட நின்று ரசித்திருப்பாய்! ஆனால் -
செவ்வாய்க்குப் பாலம் போட்டு
சென்று வந்து சிரித்திடுவாய்.

இருட்டு உன்னை மிரட்டாது
வெளிச்சம் உன்னை எழுப்பாது.
சண்டை உன்னைச் சளைக்காது
சத்தம் உன்னைத் துளைக்காது.

மண்ணில் வாழும் புழுவில் தொடங்கி
விண்ணில் சொலிக்கும் சூரியன் வரையில்
அத்தனைக்கும் இன்ப துன்பம் -
உண்டு என்கிறாய்.

உனது கண்கள் காணும் காட்சி
ஒருமுறையேனும் பார்த்திடனும்.
நெகிழவைக்கும் உன்னைப்போல
உண்மையாக உருகிடனும்.

உன் விழியின் வழியாக
பூவுலகம் பார்த்திடனும்
உன் செவியின் வழியாக
உயிரோசை கேட்டிடனும்
உன் சிறகில் இறகாக
வரம் ஒண்ணு வாங்கிடனும்.

பிரம்மதேவன் அருள் பெற்ற
மகராணித்தேர்வலம்.
கவித் தேவன் காலணியில்
நான்போகும் ஊர்வலம்!

No comments: