25 பசியே பிரபஞ்சம்


உயிரை வளர்க்கவே
தொப்புள் கொடி பாலம்

வயிறை வளர்க்கவே
பால் தரும் பந்தம்

தேகம் வளர்கவே
தாய்மையின் பாசம்

உழைப்பும் சேமிப்பும்
கலையும் இலக்கியமும்
நட்பும் காதலும்
பிறப்பும் இறப்பும்
பசி பசி பசி

பசியே தொடக்கம்
பசியே சுழற்சி
பசியே முழுமை
பசியே பிரபஞ்சம்

1 comment:

Anonymous said...

பசியின்றேல் வசிக்க முடியுமா ?

அறிவுப்பசி, ஆர்வப்பசி, இவை எல்லாம் கவிதைப் பசியில் தானே சுவைக்கின்றன!

பசித்தால் தான் உயிர்! இல்லையெனில் .......

அன்புடன் ..... செல்வி ஷங்கர்