**
பைசா கோபுரங்கள் நிமிரட்டும்நாம்
கைகுலுக்கிக் கொள்வது
நம் விரல்களைச்
சரிபார்த்துக்கொள்ளத்தான்

தேவையற்ற
நகங்களை நறுக்கத்தான்

அழகு மிளிர விரல்களில்
சந்தனம் பூசத்தான்

பொய்ப்புகழ்ச்சி மோதிரமிடவோ
பொறாமை நெருப்பில்
தோல் கருக்கவோ அல்ல

உங்கள் விமரிசனங்களால்
எனக்குள் இருக்கும்
பைசா கோபுரங்களெல்லாம்
நிமிர்ந்து கொள்கின்றன

3 comments:

cheena (சீனா) said...

படைப்பாளன் விமரிசனங்களைத் தாங்கும் வலிமை பெற வேண்டும். அது தான் அவனது வெற்றிக்கு வழி வகுக்கும்.

சேதுக்கரசி said...

//உங்கள் விமரிசனங்களால்
எனக்குள் இருக்கும்
பைசா கோபுரங்களெல்லாம்
நிமிர்ந்து கொள்கின்றன//

இந்தக் கற்பனை வித்தியாசமாக இருக்கிறது :-)

Suresh Babu said...

உங்கள் விமரிசனங்களால்
எனக்குள் இருக்கும்
பைசா கோபுரங்களெல்லாம்
நிமிர்ந்து கொள்கின்றன


உண்மைங்க புகாரி! நல்லா சொல்லி இருக்கீங்க!

-சுரேஷ்பாபு