இனிய இணைய அன்பர்களே,
உலகின் முதல் யுனித்தமிழ்க் குழுமமான
அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
யுனித்தமிழ் தட்டச்சுவது எப்படி?இதயம் மீறும் எண்ணங்களால்
நாம் எழுந்து பறப்போமே
இதய நிழலில் இதயம் கிடத்தி
இன்னல் துறப்போமே
இதுதான் அன்புடனின் மூச்சும் பேச்சும்.
இது தமிழர்களுக்கான குழுமம், யுனித்தமிழில் மட்டுமே இது இயங்கும். இங்கே கௌரவமான விசயங்கள் மட்டுமே பரிமாறிக்கொள்ளப்படும். விளம்பரங்கள், ஆபாசங்கள் போன்றவற்றுக்கு இங்கே அனுமதி இல்லை.
தமிழ்க் கவிதைகள், கட்டுரைகள், கதைகள், தமிழ் வளர்ச்சி, தமிழ் உறவுகள் பற்றிய எண்ணங்கள், தமிழ் கற்கும் பயிற்சிகள் போன்று ஆக்கப்பூர்வமான தலைப்புகளிலேயே இங்கே மடலாடல்கள் நிகழும். இவற்றை அனுசரிப்போர் மட்டும் இக்குழுமத்தில் சேரும்படி அன்புடன் பணிகிறோம்.
(புகைப்படம்: 2007 சென்னை அன்புடன் சந்திப்பு)
அன்புடன், 2005ம் ஆண்டு மார்ச் மாதம் ஏழாம் தேதி திங்கட்கிழமை தொடங்கப்பட்டது. தொடங்கிய 16 மாதங்களுக்குள் நானூறுக்கும் மேற்பட்ட அன்பர்கள் அறுபதாயிரத்து ஐந்நூறு மடல்களைத் தாண்டி அன்பையே அச்சாணியாகக்கொண்டு கருத்தாடல்கள் நடந்தி வருகிறார்கள். இது தமிழ்க்குழும உலகில் இதுவரை தொட்டிராத எ…
Comments