200302 வலையில் விழுந்து இணையம் நுழைந்து


இப்போது ஒரு நகைச்சுவைப் பாட்டு. விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே என்ற இளையராஜாவின் அற்புதமான பாடலை எவரும் மறந்திருக்க மாட்டார்கள். அதே மெட்டு ஆனால் காலத்திற்கேற்ப கணினிச் சூழல். என்ன நடக்கிறதென்று பாருங்கள் :)


வலையில் விழுந்து இணையம் நுழைந்து
மடலில் கலந்த உறவே

வலையும் விழியும் உரசிக்கொள்ளும்
இணையப் பொழுதில் வந்துவிடு

யாகூ பேச்சின் கரையில் இருப்பேன்
உயிரைத் திருப்பித் தந்துவிடு

உன் நுழைவுக் கதவொலி
இணையம் கேட்டால்
அத்தனை நிரலியும் திறக்கும்

உன் அஞ்சல் பூமழை
கணினியில் விழுந்தால்
அத்தனை ஜன்னலும் திறக்கும்

நீ கூகுள் பேச்சில்
வணக்கம் சொன்னால்
யாகூவுக்குக் காயச்சல் வரும்

நீ விடுமுறை என்று
வீட்டில் கிடந்தால்
வலைத்தளம் எல்லாம் உறைந்துவிடும்

வலையில் விழுந்து
இணையம் நுழைந்து
மடலில் கலந்த உறவே

கணினி செல்லக் கூடாதென்று
அம்மா ஆணையிட்டார்

அஞ்சல் மீன்கள்
இரண்டில் ஒன்றை
இணைப்பின் தடுப்பில் போட்டார்

வலையில் விழுந்து
இணையம் நுழைந்து
மடலில் கலந்த உறவே

வலையும் விழியும் உரசிக்கொள்ளும்
இணையப் பொழுதின் போது

யாகூ கரையில் காத்திருப்பேன்
கூகுள் விழிகளோடு

எனக்கு மட்டும் சொந்தம் உனது
விரல்கள் தட்டும் அஞ்சல்

உனக்கு மட்டும் கேட்கும் எனது
கணினி சொடுக்கும் சத்தம்

Comments

அருமையான - புகாரியிடம் எதிர்பார்க்காத - தங்கிளீஷ் நகைச்சுவைக் கவிதை. அருமை அருமை.
நீங்கள் சொல்வது சரிதான் சீனா!
நகைச்சுவை என்றும் தமிங்கிலத்தை விடோம்.

இப்போதைக்கு இப்படியான மாற்றமுடன் இருக்கட்டும் :)

மாற்றிவிட்டேன் பாருங்கள்
புகாரி,
என் கருத்துக்களுக்கும் மதிப்புக் கொடுத்து மாற்றங்கள் செய்கிறீர்களே !! நட்பினை மதிக்கும் நல்ல உள்ளத்திற்கு நன்றிகள் பல.
சீனா, நட்பின் மீது மதிப்பு, தமிழின் மீது பெருமதிப்பு!
அச்சோ.. தாங்கமுடியலை :-)))
Ramesh said…
நல்லா இருக்குங்க உங்க வலையில் விழுந்து இணையம் நுழைந்து...

எப்படி எல்லாம் சிந்திக்கிறீங்க

நட்புடன்
ரமேஷ்
ரிஷான் said…
ஹா ஹா ஹா..அருமை நண்பரே.

எம். ரிஷான்
Ayisha said…
//வலையும் விழியும் உரசிக்கொள்ளும்
இணையப் பொழுதின் போது//

இது நல்லாருக்கு ஆசான். எப்படித்தான் இப்படியெல்லாம் சிந்திக்க முடிகின்றதோ.?

அன்புடன் ஆயிஷா

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சென்னை விழா நன்றியுரை

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

காணி நிலம் வேண்டும் பராசக்தி

கண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ