திருமண அழைப்பிதழ்


பேரன்புடையீர்

நிகழும்
1985ம் ஆண்டு
டிசம்பர் திங்கள் 1ம் நாள்
பிறை 18 காலை 9 முதல் 10க்குள்

என்
வாலிப வானுக்குள்
உலாவர வருகிறாள்
ஒரு வசீகர நிலா

என்
பசும்புல் வெளிகளில்
எழில் கூட்டப் பூக்கிறாள்
ஒரு வசந்த ரோஜா

பொழுதும்
கனவுக் காற்று வீசும்
என் மனக்கரை மணலில்
நடனமிட வருகிறாள்
ஓர் இளமயில்

ஆம்...
நான் என்
விலா எலும்பின்
விலாசத்தை விசாரித்து
மாலைமாற்ற
மனங்களைக் குவித்துவிட்டேன்

உதவி நிர்வாகப் பொறியாளர்
ஜனாப் பி. அப்துல்குதா அவர்களின்
நேசப்புதல்வி செல்வி யாஸ்மின் ராணி
பெரியோர்களின் நல்லாசியுடன்
பட்டுக்கோட்டை
86, காளியம்மம் கொவில் தெரு
மணமகள் இல்லத்தில் என்னுடன் இணைய
தாம்பத்ய தீபம் ஏற்றுகின்றோம்

எங்கள் இல்லறக் கவிதைக்கு
இனிய வாழ்த்துப் பண்ணிசைக்க
நன்நெஞ்சத்தோரே வாரீர்.... வாரீர்....

பிரியங்களடர்ந்த இதயமுடன்
புகாரி

1 comment:

cheena (சீனா) said...

இல்லறத்தை நல்லறமாக்க இணையும் மணமக்களே !! 1985ல் நடந்த திருமணத்திற்கு இப்பொழுது வாழ்த்து. மிகப் பெரியவனான இறைவன் எல்லா நலனையும் இருவருக்கும், சந்ததியினருக்கும், உறவினர்களுக்கும் அருள இறைஞ்சுகிறேன்.

நல்வாழ்த்துகள்