கவிதைகளால் அளந்துபார்


கவிதைகளால்
முகர்ந்துபார்
உலகம் பூப்போலே

கவிதைகளால்
உறங்கிப்பார்
கனவும் நிஜம்போலே

கவிதைகளால்
தொட்டுப்பார்
பரிசம் சொர்க்கம்போல

கவிதைகளால்
வளைத்துப்பார்
இதயம் முயல்போல

கவிதைகளால்
தேடிப்பார்
வாழ்க்கை கைவிரல்போல

கவிதைகளால்
திறந்துபார்
கதவும் காற்றுபோல

கவிதைகளால்
வைதுபார்
பகையும் நட்புபோல

கவிதைகளால்
நிமிர்ந்துபார்
வானமும் துகள்போல

கவிதைகளால்
அளந்துபார்
காலமும் சிறுநொடிபோல

3 comments:

Anonymous said...

//கவிதைகளால்
வைதுபார்
பகையும் நிலையாதே//

வாவ்.. கலக்கிட்டீங்க புகாரி.

//கவிதைகளால்
அளந்துபார்
காலம் குறுகியதே//

நல்ல முடிவு.

Prabu said...

அன்புள்ள திரு.புகாரி,

தங்கள் கவிதைகளான வளைகுடா, அறுவடை, மருதாணி, பைசா கோபுரம், யாரோ ஒருவன்.., தொலைபேசி, என் குரல்...., மின்னஞ்சல் ஓசை பாடல் ம்ற்றும் அனைத்தும் மிக மிக அருமை. பாராட்ட வார்த்தைகளில்லை.

வார்த்தைகளிலும், கருத்துக்களிலும் விளையாடியிருக்கிறீர்கள்.அற்புதம்.

-த.பிரபுகுமரன்.

cheena (சீனா) said...

அருமைக் கவிதை. கவிதைகளால் என்ன வெல்லாம் செய்ய முடியும் என்று அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள் - வாழ்த்துகள்